Skip to main content

Posts

Showing posts from October, 2025

இனி கடைகளில் ORSL வாங்கி குடிக்காதீங்க !! ரொம்ப ஆபத்து., தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை..

தமிழகத்தில் உள்ள மருந்தகம் மற்றும் கடைகளிலும் ORSL என லேபிளை பயன்படுத்தி விற்பனை செய்தால் தமிழக உணவு பாதுகாப்புதுறை மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் உடனடியாக பறிமுதல் செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு. உலக பொது சுகாதார அமைப்பு (WHO) மற்றும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்(ICMR)என அச்சிடப்பட்ட ORS- கள் மட்டுமே தமிழகத்தில் விற்பனை செய்யப்பட வேண்டும் ORSL, ORSL Plus, ORS Fit என பெயர் அச்சிட்டு மருந்தகத்திலும் மற்றும் கடைகளில் விற்பனை செய்ய தடை விதித்தது தமிழக சுகாதாரத்துறை ORS என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஓரல் ரீஹைடிரேஷன் சொல்யூஷன் என்பது வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் பிற காரணங்களால் உடலில் இருந்து திரவங்கள் வெளியேறி நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் போது வழங்கப்படும் முதல் சிகிச்சையாக அமைகிறது மேலும், ORS-யில் காணப்படும் தண்ணீர், உப்பு, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றின் கலவை உடல் இழந்த திரவங்கள் மற்றும் மினரல்களை உடனடியாக மீட்டெடுப்பதற்கு உதவுகிறது,இப்படிப்பட்ட ஓஆர்எஸ் பல்வேறு வகையாக உருவெட...

நெல்லையில் பசு மாட்டின் முகத்தில் கல்லை போட்டு துடிதுடிக்க கொன்ற இருவர் : வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நெல்லையில் பசு மாட்டின் முகத்தில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்: வலியால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பசுமாடு  வெளியான வீடியோவால் பெரும் பரபரப்பு!  திருநெல்வேலி மாவட்டம், குறிச்சி பகுதியில் குடிபோதையில் இருந்த இருவர், சாலையில் சென்ற பசு மாட்டை அடித்து, மிதித்து, முகத்தில் பெரிய கல்லை போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்தக் கொடூரச் செயலின் வீடியோ இணையத்தில் வெளியாகி, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. நெல்லை மாவட்டம் குறிச்சி பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒரு முதியவர் மற்றும் ஒரு நடுத்தர வயதுடைய நபர் ஆகிய இருவரும் நடந்து சென்றுள்ளனர்.  அப்போது, அங்கிருந்த ஒரு பசு மாடு அவர்கள் மீது லேசாக முட்டுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், அந்த அப்பாவி பசு மாட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். முதலில் கொடூரமாக மாட்டை அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர் மாட்டை மிதித்து கீழே தள்ளியுள்ளனர். கீழே விழுந்த மாட்டின் முகத்தில், அங்கிருந்த பெரிய கல்லை தூக்க...

பாசமிகு செம்மறி ஆட்டுக்குட்டியுடன் பைக் வாங்க வந்த விவசாயி: நெல்லையில் நெகிழ்ச்சி !!

நெல்லை மாவட்டத்தில் ஒரு விவசாயத் தம்பதியினர், தாங்கள் பாசமாக வளர்க்கும் செம்மறி ஆட்டுக்குட்டியை அழைத்து வந்து, புதிதாக இருசக்கர வாகனம் வாங்கிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம், நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயத் தம்பதியினர் முத்து குமரன் மற்றும் லட்சுமி. இவர்கள் இருவரும் தங்கள் உழைப்பால் ஈட்டிய பணத்தில் புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றுக்கு வந்திருந்தனர். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆடு, மாடுகள் மீது கிராமப்புற மக்களுக்கு எப்போதும் தனிப் பாசம் உண்டு. அதே பாசத்தின் வெளிப்பாடாக, இந்தக் கணவன்-மனைவி இருவரும் தாங்கள் பாசமாக வளர்த்து வரும் ஆட்டுக்குட்டி ஒன்றையும் கூடவே தூக்கிக் கொண்டு ஷோரூமுக்கு வந்திருந்தனர். அங்கு புதிய வாகனத்தை வாங்கும் நடைமுறைகள் நடந்துகொண்டிருந்தபோது, அந்த குட்டி ஆடும் தனது உரிமையாளர்கள் பின்னால் ஷோரூமில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. இந்தச் செயல் அங்கிருந்த அனை...

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்கங்கள் நெல்லையில் ஒரு நாள் அடையாள போராட்டம்

தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000 ஆகமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் "ஒரு நாள் தற்செயல் விடுப்பு" எடுத்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாநில மாநாட்டில் வலியுறுத்திய 16 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.10,000 மாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், 01.06.2009 முதல் அரசாணை எண் 234 ன் படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு மாத ரூபாய் 20 ஆயிரம் வழங்கி பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்...

நெல்லையில் தரங்கெட்ட சாலை பள்ளத்தில் சிக்கிய பள்ளி வாகனம்: 30 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கே.டி.சி. நகர் அருகே உள்ள டார்லிங் நகர் பகுதிகளில், மாநகராட்சியின் அலட்சியத்தால் மோசமடைந்த சாலைகளில் ஏற்பட்ட விபத்தில், பள்ளி வாகனம் பள்ளத்தில் சிக்கியது.  பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல், தற்காலிகமாக செம்மண்ணைக் கொண்டு மூடப்பட்டதன் காரணமாக சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை கே.டி.சி. நகரில் உள்ள ஓயாசிஸ் பள்ளிக்குச் சொந்தமான வாகனம், சுமார் 30 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றபோது, டார்லிங் நகர் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது செம்மண்ணால் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் வேனின் ஒரு டயர் எதிர்பாராதவிதமாகச் சிக்கியது.  இதனால் நிலைகுலைந்த வாகனம் மேலும் நகர முடியாமல் பள்ளத்திலேயே சிக்கிக் கொண்டது. நல்வாய்ப்பாக, பள்ளத்தில் சிக்கிய வாகனம் அங்கும் இங்கும் பிறழாமல் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நின்றதால், வேனில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிர்ஷ்டவசமாகப் பெரிய விபத்து ஏதுமின்றி உயிர் தப்பினர். உடனடிய...

திருநெல்வேலி வீராங்கனைக்கு தமிழக வெற்றிக் கழகம் பாராட்டு!

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை எட்வினா ஜெய்சன், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். இச்சாதனையைப் படைத்த வீராங்கனையின் பயிற்சியாளரை, திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். வெள்ளிப் பதக்கம் வென்ற எட்வினா ஜெய்சன்: திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் விளையாட்டு கழகத்தைச் சார்ந்த எட்வினா ஜெய்சன், 2025 அக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை அன்று பஹ்ரைனில் நடைபெற்ற 3வது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். குறிப்பாக, மெட்லி ரிலே (MEDLY RELAY) போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணியை இரண்டாவது இடத்திற்குக் கொண்டு வந்து வெள்ளிப் பதக்கம் வெல்ல இவர் முக்கியப் பங்காற்றினார். இந்த வெற்றியின் மூலம், இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த எட்வினா ஜெய்சன், தமிழகத்தில் இருந்து இப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டு பதக்கங்களை வென்ற ஒர...

நெல்லை மகளிர் விடியல் பேருந்து பயணத்தில் தே**** ம**** என்ற ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த ஓட்டுநர் : Left, Right விட்ட பெண்

நெல்லையில் மகளிர் விடியல் பயண பேருந்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம் : "ஓசிப்பேருந்து சர்ச்சை - அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது பெண்கள் புகார், நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை திருநெல்வேலியில் அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநர், பெண் பயணிகளை "ஓசிப்பேருந்து" என இழிவாகவும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசி அவமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெண்களை கேவலமாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், இரவில் உரிய நிறுத்தத்தைத் தாண்டி இறக்கிவிட்டதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து அரசு சிறப்பு மருத்துவமனைக்குச் செல்லும் தடம் எண் 2-ன் (வண்டி எண்: TN 72 N 2253) அரசுப் பேருந்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்தின் ஓட்டுநர், பெண் பயணிகளைப் பார்த்து "ஓசிப்பேருந்து" என்று இழிவாகக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  மேலும், அவர் பெண்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, அவமதித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஓட்டுநர் இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தங்களைத் தாண்டி பெண்களை நடுவழியில் இ...

தீப்பிடித்து எறிந்த ஆம்னி பேருந்து : தூக்கத்திலேயே தீயில் கருகி 21 பேர் பலி

தீப்பிடித்து எறிந்த ஆம்னி பேருந்து தூக்கத்திலேயே தீயில் கருகி 21 பேர் பலி: அதிகாலையில் அரங்கேறிய சோகம் பெங்களூரு - ஹைதராபாத் சொகுசு பேருந்து விபத்து பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு வால்வோ பேருந்து, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், சின்னட்டகூரு (சின்ன ஒரவக்கல் அருகில்) அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கோர சம்பவத்தில், அதில் பயணித்த 21 பேர் துரதிர்ஷ்டவசமாகத் தூக்கத்திலேயே கருகி உயிரிழந்தனர். 42 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தீ மளமளவெனப் பேருந்து முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த எதிர்பாராத விபத்தால் அதிர்ச்சியில் உறைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் சிலர் செய்வதறியாது திகைத்தனர். எனினும், பேருந்தில் இருந்தவர்களில் 12 பேர் தங்களைச் சுதாரித்துக் கொண்டு, பேருந்தின் அவசரகால வழியைப் பயன்படுத்தி வெளியில் குதித்து உயிர்தப்பினர். ஆனால், மற்ற பயணிகள் அனைவரும் பேருந்துக்குள் சிக்கிக் கொண்...

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா நெல்லையில் உற்சாக கொண்டாட்டம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா:   நெல்லையில் நலத்திட்ட உதவிகள், சிறப்பு பூஜைகளுடன் கோலாகலம் -  பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா பங்கேற்பு ---------------------- -------------------- --------------------  நெல்லை: 16.10.2025 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள் மற்றும் பொதுநலப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. குறிப்பாக, நெல்லை வர்த்தகப் பிரிவு சார்பில் இந்த நிகழ்ச்சிகள் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் சிறப்பான நிகழ்வுகள்: பாபநாசத்தில் சிறப்பு பூஜை: நெல்லை மாவட்டம், பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவிலில் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  ரத்ததான முகாம்: நெல்லை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், இளைஞரணி சார்பில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில் திரளானோர் ஆர்வத்து...

பாளையங்கோட்டை மார்க்கெட்டில் தோண்டப்பட்ட பள்ளம் : வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் கொந்தளிப்பு விசாரணையில் வெளிவந்த திடீர் திருப்பம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாளையங்கோட்டைப் பழைய மார்க்கெட்டின் முக்கிய நுழைவாயிலில் திடீரென ஒரு பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால், வியாபாரிகள் மார்க்கெட் நிர்வாக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் சங்கத்தினர் முதலில் அளித்த புகாரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகத்திற்குச் செல்லத் தாமதிக்கும் வியாபாரிகளை அங்கிருந்து வெளியேற்றக் கட்டாயப்படுத்தும் நோக்குடன் மாநகராட்சி நிர்வாகமே இந்தப் பள்ளத்தைத் தோண்டியதாகக் குற்றம்சாட்டினர்.  வியாபாரத்தைப் பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். உண்மைக் காரணம் வெளியானது: வியாபாரிகள் சுட்டிய குற்றச்சாட்டை மாநகராட்சி அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்தனர். மாநகராட்சித் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "நாங்கள் பள்ளம் தோண்டவில்லை. இது தனிப்பட்ட ஒருவரின் செயல். புதிய வணிக வளாகத்திற்கு ஏற்கனவே கடையை மாற்றிய ஒரு வியாபாரி, பழைய மார்க்கெட...

முதல்வரின் சம்பந்திக்கு கோவில் வளாகத்தில் 30 ஆம் நாள் காரியம் ? இந்து முன்னணி கண்டம்

மு.க.ஸ்டாலின் சம்பந்திக்கு கோவில் வளாகத்தில் 30-ம் நாள் காரியம்: அதிகார துஷ்பிரயோகமா? இந்து முன்னணி கடும் கண்டனம்! திருநெல்வேலி மாவட்டம், அரிநாயகிபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அவர்களின் தந்தைக்கு 30-வது நாள் காரிய சடங்குகள் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, கோவில் வளாகத்தில் உள்ள பிரதான வாயிலை மறித்தும், பலிபீடம் அருகிலும் மேடை மற்றும் ஏர்கூலர் வசதியுடன் பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்வரின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவரின் குடும்ப சடங்கிற்காக, கோவில் வளாகத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது குறித்து இந்து முன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்:  "அதிகாரத்தில் இருப்பவர்களின் துஷ்பிரயோகமாக இது தெரிகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பப் பெரியோருக்கான காரியம் மற்றும் வழிபாடுகளை இதுபோல...

உயிரிழந்த தாய் பசுவின் உடலை நாய்களிடமிருந்து காப்பாற்ற பாச போராட்டம் நடத்திய கன்றுக்குட்டி : Warning ⚠️ This post may offend some viewers.

திருச்செந்தூர் கோவில் அருகே இறந்த நிலையில் கிடக்கும் பசு மாடு: நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் துர்நாற்றம் – பக்தர்கள் வேதனை நாய்களிடம் இருந்து தாய் பசுவின் உடலை பாதுகாக்க பாச போராட்டம் நடத்திய கன்று குட்டி  திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கும் விதமாக, கோவில் அருகே, முக்கிய வழித்தடத்தில் இறந்த நிலையில் கிடக்கும் பசு மாட்டை அப்புறப்படுத்தாமல் திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தசரா திருவிழா முடிந்துள்ள நிலையில், தற்போது நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை புரிந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.  இந்த நிலையில், திருச்செந்தூர் கடற்கரை அருகே அமைந்திருக்கும் ஐயா வைகுண்டர் கோவில் அருகில் ஒரு பசு மாடு இறந்த நிலையில் கிடக்கிறது. இறந்து கிடக்கும் பசு மாட்டைப் பார்த்தால், குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் என...