தீப்பிடித்து எறிந்த ஆம்னி பேருந்து
தூக்கத்திலேயே தீயில் கருகி 21 பேர் பலி: அதிகாலையில் அரங்கேறிய சோகம்
பெங்களூரு - ஹைதராபாத் சொகுசு பேருந்து விபத்து
பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு வால்வோ பேருந்து, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், சின்னட்டகூரு (சின்ன ஒரவக்கல் அருகில்) அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கோர சம்பவத்தில், அதில் பயணித்த 21 பேர் துரதிர்ஷ்டவசமாகத் தூக்கத்திலேயே கருகி உயிரிழந்தனர்.
42 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தீ மளமளவெனப் பேருந்து முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த எதிர்பாராத விபத்தால் அதிர்ச்சியில் உறைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் சிலர் செய்வதறியாது திகைத்தனர். எனினும், பேருந்தில் இருந்தவர்களில் 12 பேர் தங்களைச் சுதாரித்துக் கொண்டு, பேருந்தின் அவசரகால வழியைப் பயன்படுத்தி வெளியில் குதித்து உயிர்தப்பினர்.
ஆனால், மற்ற பயணிகள் அனைவரும் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் மொத்தம் 21 பேர் இந்தத் தீ விபத்தில் சிக்கி உயிருடன் எரிந்து சாம்பலாகி விட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.