எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி
"நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி :
"திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை திமுகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ??என்னவோ?? தோல்வி பயத்தால் சபாநாயகர் இப்படி உளறி வருகிறார். சபாநாயகர் மட்டுமல்ல தமிழக முதலமைச்சரும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நான்கரை ஆண்டுகள் திமுக ஆட்சி அமைத்ததற்கு பல லட்சக்கணக்கான இந்துக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் இன்று அதே இலட்சக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை நீங்கள் புண்படுத்தி உள்ளீர்கள். வருகின்ற தேர்தலிலும் அதே இந்துக்கள் உங்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழக பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C.அசோக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.