Skip to main content

Posts

Showing posts from August, 2026

மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் : ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி புதிய முதல்வர் ஷீலா

திருநெல்வேலியை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் புதியதாக பொறுப்பேற்ற கல்லூரி முதல்வர் : திருநெல்வேலி பழைய பேட்டை காந்தி நகர் அருகே அமைந்திருக்கும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி ஆனது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் தென்காசி மற்றும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும் கூட பல ஆயிரக்கணக்கான மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகிறார்கள்.  கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையினை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில் இங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொரு ஆசிரியர்களும் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி என்பது தற்போதைய நவீன காலத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.  அந்த வகையில் மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பல்வேறு வசதிகளை மாணவிகளுக்கு செய்து கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வியோடு மட்டுமல்லாமல் விளையாட்டு தனிநபர் த...