திருநெல்வேலியை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் புதியதாக பொறுப்பேற்ற கல்லூரி முதல்வர் : திருநெல்வேலி பழைய பேட்டை காந்தி நகர் அருகே அமைந்திருக்கும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி ஆனது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் தென்காசி மற்றும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும் கூட பல ஆயிரக்கணக்கான மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையினை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில் இங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொரு ஆசிரியர்களும் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி என்பது தற்போதைய நவீன காலத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பல்வேறு வசதிகளை மாணவிகளுக்கு செய்து கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வியோடு மட்டுமல்லாமல் விளையாட்டு தனிநபர் த...
நெல்லையப்பர் தேரோட்டத்தை காண வரும் பக்தர்களே வருக வருக !! தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் N.சுந்தர் வரவேற்பு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆன்மீகத் திருநாளில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் N. சுந்தர் அவர்கள், திருநெல்வேலி மாநகருக்கு வருகை தந்துள்ள அனைத்து பக்தர்களுக்கும் தனது அன்பார்ந்த வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது குறித்து N. சுந்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: "நெல்லை மாநகரின் ஆன்மீகச் செழுமையையும், பண்பாட்டுப் பெருமையையும் உலகிற்குப் பறைசாற்றும் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட விழாவைக் காண வருகை தந்துள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பக்தர்களையும், பொதுமக்களையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த புனித நாளில் சுவாமி நெல்லையப்பரின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்தத் தருணத்தில், கோவில் நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்குப் பக்தர்கள் அனைவரும் ம...