நெல்லையில் விநாயகர் சிலை அகற்றம் : கொதித்தெழுந்த இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ; நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் போராட சென்ற பாஜக ஆன்மீகப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பாஜக ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் உட்பட பலர் கைது திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் ஒரு தனியார் உணவகத்தின் அருகே, அந்த கடையின் உரிமையாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த விநாயகர் சிலையை, நெல்லை மாநகர காவல் துறையினர் முறையான அனுமதி பெறாமல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறி நேற்று நள்ளிரவு அகற்றினர். கடப்பாரை போன்ற ஆயுதங்களைக் கொண்டு விநாயகர் சிலையை இடித்து அங்கிருந்து அப்புறப்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிப் பொதுமக்களும் பெண்களும் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வீட்டுச் சிறை: இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, குற்றாலநாதனை அவரது வீட்டிலேயே போலீசார் கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தனர். இந்தச் சூழலில், "சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்குத்தான் அனு...