தமிழகத்திற்கு வருகை தரும் தலைமகனே வருக வருக !! தமிழக பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் கமலேஷ் வரவேற்பு
தமிழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: தமிழக பாஜக இளைஞரணி துணைத் தலைவர் கமலேஷ் வரவேற்பு
கோவை:
தமிழகத்தின் கோவை மாவட்டத்திற்கு (19/11/2025) வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநில இளைஞரணி துணைத் தலைவர் கமலேஷ், இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் உற்சாகமாக வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைமகனாக தமிழகத்திற்கு வருகை தரும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, "வருக வருக" என வரவேற்று கமலேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த வரவேற்பு குறித்து பேசிய கமலேஷ், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பாஜக நாடு முழுவதும் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அண்மையில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றதைப் போலவே, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் வருகை மேலும் உத்வேகம் அளிக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையின் போது, பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி சூர்யா மற்றும் துணைத் தலைவர் கமலேஷ், மற்றும் மாவட்ட, மாநில இளைஞரணி நிர்வாகிகள் என அனைவரும் வரவேற்க தயாராகி வருகின்றனர்.