இந்திய நுகர்வோர் சம்மேளனம் CCI வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 90 நாட்கள் 28 மாநிலம் 17000 கிலோமீட்டர் நுகர்வோர் விழிப்புணர்வு பாரத் யாத்ரா
இந்திய நுகர்வோர் சம்மேளனம் நுகர்வோர் விழிப்புணர்வுக்காக கடந்த 25 ஆண்டுகளாக அயராது பாடுபட்டு வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தர மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும் பாரத் யாத்ரா என்று 28 மாநிலங்களில் 90 நாட்கள் 17,000 கிலோ மீட்டர் வெள்ளிவிழா பாரத் யாத்ரா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக தமிழ் மாநிலத்தில்23 மாவட்டத்தில் 25 சிறப்பு கூட்டங்கள் நடைபெற இருக்கின்றது. இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும், இந்திய நுகர்வோர் சம்மேளனம் இணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சொ. உடையார், கல்லிடைக்குறிச்சி நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் லயன் வீ. சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசியபெருந்தலைவர் ஆனந்த் சர்மா, தேசிய செயல் தலைவர் டாக்டர் செல்வராஜ்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் தாழையூத்து ...