Skip to main content

பராசக்தி முதல் ஜனநாயகன் வரை : ஈரோடு எஸ் ஆர் எஸ் கணிப்பு

தனிநபர் அல்லது அரசியல் கட்சியை நேரடியாகக் குற்றம் சாட்டாமல்
ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகள்,
கருத்துச் சுதந்திரத்தின் அரசியல்,சட்டப் பரிமாணம்,
திரைப்பட தணிக்கை அமைப்பின் அதிகார எல்லை,
நீதித்துறையின் பங்கு...

திரைப்படத் தணிக்கை, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் சோதனையானது,
“பராசக்தி” முதல் “ஜனநாயகம்” வரை"....

ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் முறையன்று;அது கருத்துச் சுதந்திரத்தின் மேல் கட்டப்பட்ட ஒரு சமூக ஒழுங்கு. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் வாக்குரிமை மூலம் ஆட்சியை அமைப்பதோடு மட்டுமல்லாது ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கவும், கேள்வி கேட்கவும், மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்தவும் உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். 

இந்த உரிமைகளின் வெளிப்பாடு பல வடிவங்களில் நிகழ்கிறது! பேச்சு, எழுத்து, கலை, நாடகம், இலக்கியம், திரைப்படம் போன்ற அனைத்திலும் ஒவ்வொருவருக்கும் அந்த உரிமையுண்டு!

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு ஊடகம் மட்டும் இல்லை. அது ஒரு சமூகத்தின் மனநிலை, அரசியல் உணர்வு, எதிர்ப்புச் சிந்தனை, மாற்றம் வேண்டிய கோரிக்கை,ஊழல் எதிர்ப்பு,சமூக மாற்றம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தக்கூடிய வலுவான கலை வடிவம். அதனால் தான் உலகெங்கும் அரசியல் அதிகாரங்கள் திரைப்படத்தை எப்போதும் கவனத்துடன் அணுகி வருகின்றன.
இந்தப் பின்னணியில்,
“பராசக்தி” என்றத் திரைப்படத்திற்கு திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய நிலையில்,
“ஜனநாயகம்” என்ற திரைப்படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதும்,
அது தற்போது உயர் நீதிமன்றத்தின் நீதிக்கு சென்றிருப்பதும்,
ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது!
ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எங்கு முடிகிறது?
அரசு மற்றும் தணிக்கை அமைப்புகள் அந்த எல்லையை நிர்ணயிக்கலாமா
இந்தக் கட்டுரை, அந்தக் கேள்வியை உணர்ச்சி சார்ந்ததாக அல்லாமல், அரசியல்,சட்டம்,
ஜனநாயக அடிப்படைகளின் வழியாக நியாயமாக ஆராய்கிறது.

1. ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும்..
இந்திய அரசியலமைப்பின் ஆன்மா Article 19(1)(a) –
“Speech and Expression” எனும் கருத்துச் சுதந்திரமாகும்.
இந்த உரிமை;
ஆளும் ஆட்சியைப் புகழ்வதற்காக மட்டுமில்லை!
ஆட்சியை விமர்சிப்பதற்காகவும்,எதேச்சார
அதிகாரத்தை கேள்வி கேட்பதற்காகவும்,
சமூக அநீதிகளை வெளிப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது
உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தொடர்ந்து கூறி வந்துள்ளதானது,
“Freedom of expression is the foundation of a democratic society.”
ஒரு கருத்து அனைவருக்கும் பிடிக்க வேண்டுமென்ற அவசியமில்லை.ஆனால் அது ஏமாற்றத்தை, கோபத்தை, விவாதத்தை, எதிர்ப்பை உருவாக்கலாம்.
அந்த எதிர்வினையே ஜனநாயகத்தின் உயிர் எனப்படுவது!

2. திரைப்படத் தணிக்கை என்பது பாதுகாப்பா? கட்டுப்பாடா?
மத்தியத் திரைப்பட தணிக்கைக் குழு (CBFC) என்பது,
நீதிமன்றம் அன்று!
அரசியல் அமைப்பும் கிடையாது! அது
“Certification Authority” மட்டுமே.
அதன் நோக்கம்,
வயது வரம்பு நிர்ணயம்
சமூக அமைதியை பாதிக்கும் நேரடி தூண்டுதல்களைத் தவிர்த்தல்
ஆனால், “என்ன பேசலாம், என்ன பேசக்கூடாது” என்பதை தீர்மானிக்கும் அதிகாரமாக அது மாறினால்,அது
ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிரானதாக மாறுகிறது.
3. “பராசக்தி” அனுமதி பெற்ற அரசியல் விமர்சனம்...
“பராசக்தி” திரைப்படம்,
சமூக அநீதிகளை கேள்வி கேட்டது?
மத, அரசியல் அதிகாரங்களை விமர்சித்தது,
பொதுமக்களின் துன்பங்களை உரக்கப் பேசியது,
அது ஒரே அரசியல் கருத்தை முன்வைத்தது என்று சிலர் கூறினாலும், அது ஒரு சமூகக் குரல் என்றே பார்க்கப்பட்டது.
மத்தியத் திரைப்பட தணிக்கைக் குழு,
அதில் கருத்துச் சுதந்திரம் மேலோங்கியுள்ளது,நேரடி 
வன்முறை அல்லது சட்ட விரோதத் தூண்டுதல் இல்லை என்று
கருதி அனுமதி வழங்கியிருக்கலாம்.இது ஒரு
முக்கிய முன்னுதாரணமாகும்.அரசியல்
விமர்சனம்,தேச விரோதம் அன்று.
4. “ஜனநாயகம்” அனுமதி மறுப்பு...
“ஜனநாயகம்” திரைப்படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது எழுந்த கேள்விகள்,அது
எந்தச் சட்டத்தை மீறியது?அது 
நேரடியாக சமூகத்தில் வன்முறையைத் தூண்டியதா?
அல்லது மதம்,சாதி சமூகக் கலவரத்தை உருவாக்கியதா?
அல்லது அது அரசியல் அதிகாரங்களை கேள்வி கேட்டதா?
ஒரு திரைப்படம்,
தேர்தல் நடைமுறைகளை,
ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை,
ஜனநாயகத்தின் குறைபாடுகளை,
விமர்சித்தால், அது தணிக்கைக்கு உரியதா?
   5-தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஆட்சியும் , விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது!
ஜனநாயகத்தில்,
அரசு மக்களின் சேவகர்!அதிகாரம்
மக்களிடமிருந்து பெறப்பட்டது.
எனவே,அதிகாரம்
பெற்றவர் அதிக விமர்சனத்திற்குரியவராகத்தான் இருப்பர்.இந்தக்
கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாத ஜனநாயகம், மெதுவாக அதிகாரவர்க்கமாக மாறும்.
6. நீதித்துறை கடைசிப் பாதுகாவலன்..
“ஜனநாயகம்” திரைப்படம் உயர் நீதிமன்றம் சென்றிருப்பது,
இந்த நாட்டின் ஜனநாயக வலிமையை வெளிப்படுத்துகிறது.
நீதிமன்றங்கள் இதுவரை பலமுறை கூறியுள்ளன:
தணிக்கை குழுவானது,“moral guardian” அல்ல,
அது கருத்துகளின் நீதிபதியும் அன்று!
சமூகத்தில் விவாதம் ஏற்படுவது ஜனநாயகத்தின் தோல்வியாக எடுத்துக்கொள்ளக் கூடாது !
நீதிமன்றத்தின் பங்கானது,
அரசுக்கும் குடிமகனுக்கும் இடையிலான சமநிலையை தொடர்ந்து காப்பாற்றுவது! 
7.“பிடிக்கவில்லை”, “தடை செய்ய வேண்டும்”....
ஒரு கருத்து,
ஒருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்,
அரசுக்கு சங்கடமாக இருக்கலாம்,
அதிகாரத்தை அசௌகரியப்படுத்தலாம்,ஆனால்
அதற்கான ஜனநாயகப் பதில் மறுப்பு, விவாதம், விமர்சனம்.
தடை அன்று.
8. கலைஞன் vs அரசு – யார் எல்லையை நிர்ணயிப்பது?
ஒரு ஜனநாயகத்தில்,
கலைஞன் கேள்வி கேட்பான்,அரசு 
பதில் சொல்ல வேண்டும்!
அரசானது
கேள்வியை அடக்க முயன்றால்
கலைஞனை மௌனிக்கச் செய்ய முயன்றால்
அது தனது நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்குகிறது.
9. வரலாறு சொல்லும் பாடம்! ...
உலக வரலாறு பலமுறை நிரூபித்துள்ளதானது யார் ஒருவரின் நியாயமானக்
கருத்துகளை அடக்க முயன்ற அரசுகள் வீழ்ந்துள்ளன!
சத்தியத்தின் குரல்களைத் தடுத்த ஆட்சிகள் அடுத்த தேர்தலில் தண்டிக்கப்பட்டுள்ளன!மக்களின்
சிந்தனையை அனுமதித்த சமூகங்கள் முன்னேறியுள்ளன!
10-ஜனநாயகத்தின் உண்மையான சோதனை...
ஒரு நாட்டின் ஜனநாயகம்,
ஆளும் அரசை புகழ்வதை அனுமதிப்பதனால் அன்று,
விமர்சிப்பதை சகிப்பதனால்
அளவிடப்படுகிறது என்பது காலத்தின் கணக்கு! 
“பராசக்தி”க்கு அனுமதி கொடுத்ததும்,
“ஜனநாயகம்”க்கு மறுத்ததும்,
ஒரே கேள்வியை எழுப்புகிறது!
கருத்துச் சுதந்திரம் நிலையான கொள்கையா?
அல்லது சூழ்நிலைக்கேற்ப மாறும் வசதியா?
“ஜனநாயகம்” என்ற சொல், திரைப்படத் தலைப்பாக மட்டுமன்று;
அது ஒரு கருத்தின் பிரதிபலிப்பு!
ஒரு ஜனநாயக நாடு, தன்னை விமர்சிக்கும் குரல்களை அனுமதிக்கத் தயங்கினால்,
அது தன் அடிப்படை விதிகளையே சந்தேகிக்கிறது என்ற கருத்து ஏற்பட்டு விடும்! 
திரைப்படங்களை தடுக்கலாம்.
ஆனால் சிந்தனையை தடுக்க முடியாது.
“Democracy is not the silence of dissent,
but the courage to listen to it.”

   எஸ்.ஆர்.சுப்ரமணியம் 
தேசியச் சிந்தனையாளர்.

****
       

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...