Skip to main content

Posts

Showing posts from July, 2025

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அட்மிட் : என்ன நிலவரம் ??

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:  உடல்நலக்குறைவு என தகவல் சென்னை: தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 21, 2025) காலை வழக்கமான நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரது அறிகுறிகள் குறித்து பரிசோதனைகள் மற்றும் தேவையான நோயறிதல் சோதனைகள் நடைபெற்று வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் அனில் பி.ஜி. அவர்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். முதல்வரின் உடல்நிலை குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைகளை முடித்துவிட்டு விரைவில் வீடு திரும்புவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற "ENDO QUEST" வினாடி வினா : செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல் இடத்தை தட்டி சென்றது

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் முதல் குருதியியல் வினாடி வினா : "ENDOQUEST " - சிறப்பாக நடைபெற்றது : செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசை தட்டி சென்றனர்   தமிழக மருத்துவக் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை சார்பில், "ENDO QUEST" என்ற பிரம்மாண்டமான குருதியியல் வினாடி வினா (செப் 19 2025 நடைபெற்றது.  இக்கருத்தரங்கு கல்லூரி தாமிரபரணி கருத்தரங்குக் கூடத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் மரு. ரேவதி பாலன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு சிறப்பு குருதியியல் மருத்துவர்கள் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினர்.   சுமார் 500 மருத்துவர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கு, குருதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், சிகிச்சை முறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்ததாக கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.  நிகழ்...

கோத்ரேஜ் அக்ரோவ்ட் மக்காச்சோளப் பயிருக்கு புதிய களைக்கொல்லியான அஷிடகாவை அறிமுகப்படுத்துகிறது

கோத்ரேஜ் அக்ரோவ்ட் மக்காச்சோளப் பயிருக்கு புதிய களைக்கொல்லியான அஷிடகாவை அறிமுகப்படுத்துகிறது  ISK ஜப்பானுடன் இணைந்து, புற்கள் மற்றும் அகலமான இலைகளை களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான புதுமையான தீர்வு உருவாக்கப்பட்டுள்ளது  இந்தியாவின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வேளாண் வணிகங்களில் ஒன்றான ’கோத்ரெஜ் அக்ரோவெட் லிமிடெட்’ (கோத்ரெஜ் அக்ரோவெட்), சோளப் பயிருக்கு பிரத்யேகமாக ஒரு புதிய களைக்கொல்லியை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் சோள விவசாயிகள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலான பிரச்னை புற்கள் மற்றும் அகன்ற இலைகளைக் கொண்ட களைகள் ஆகும். அவற்றை திறம்பட கட்டுப்படுத்தும் ஒரு புதுமையான தீர்வு, ISK ஜப்பானுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'அஷிடகா'. மக்காச்சோளப் பயிருக்கு களை தொற்று ஒரு முக்கிய பிரச்னையாக இருப்பதால், முதன்மையாக ஆரம்ப வளர்ச்சி நிலைகளில், அஷிடகாவை 2 முதல் 4 இலை நிலையில் பயன்படுத்தினால், நல்ல களை கட்டுப்பாட்டை வழங்க முடியும். கால்நடை தீவனம், தொழில்துறை மற்றும் உயிரி எரிபொருள் பயன்பாட்டிற்கு மக்காச் சோளத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அஷிடகாவுடன்,...

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் குருதியியல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் முதல் குருதியியல் கருத்தரங்கு: "HEMATO CON" - சிறப்பாக நடைபெற்றது    தமிழக மருத்துவக் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை சார்பில், "HEMATO CON" என்ற பிரம்மாண்டமான குருதியியல் கருத்தரங்கம் இன்று (செப்டம்பர் 18, 2025) நடைபெற்றது.   இக்கருத்தரங்கு கல்லூரி தாமிரபரணி கருத்தரங்குக் கூடத்தில் காலை 9 மணி முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் மரு. ரேவதி பாலன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு சிறப்பு குருதியியல் மருத்துவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.  சுமார் 500 மருத்துவர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கு, குருதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், சிகிச்சை முறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்ததாக கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.  நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்பாளர்களின் புரிதலை சோதிக்கும் வகையில்...

திருநெல்வேலி அரசு பள்ளி மாணவர்களுக்கு “முதல் மரியாதை” விழா : பிக்பாஸ் பிரபலம் பங்கேற்க உள்ளார்

திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளை கௌரவிக்கும் விதமாக “முதல் மரியாதை” விழா நடைபெற உள்ளது. திருநெல்வேலி வேலி புறநகர் ரோட்டரி சங்கம் மற்றும் நெல்லை லைஃப் ஒருங்கிணைத்தும், Raiyan Cloth குழுமம் நடத்தும் இந்த விழாவில், பிக்பாஸ் டைட்டில் வென்ற மற்றும் தமிழ் பேச்சாளர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்கிறார். இந்நிகழ்வு வரும் ஜூலை 27, 2025 அன்று, பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து முன்னேற ஊக்கம் அளிக்கும் நோக்கில், இவர்களின் வெற்றியை கௌரவித்து பாராட்டுவது போன்ற விழாக்கள் இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக உறவை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் கை கோர்க்கிறதா அதிமுக ? எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

பாஜகவுடன் உறவை முறித்து, தவெகவுடன் (TVK) அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து பரப்பப்படும் வதந்திகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பதிலளித்தார். அது கற்பனையான கேள்வி  என அவர் திட்டவட்டமாக கூறினார். அதிமுக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்வதாகவும் அவர் தெரிவித்தார். தவெகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, எங்கள் தேர்தல் உத்திகளையும் தந்திரங்களையும் வெளியே கூற முடியாது என்றார். அதிமுக அணியில் திமுகவை வீழ்த்துவதே முக்கிய குறிக்கோள் என்பதை தெளிவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும். எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோரை வரவேற்பதில் எந்த தவறும் இல்லை என்றார்

நெல்லை உட்பட 35 மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் : இனி மருத்துவர்களுக்கு பயோமெட்ரிக் வருகைபதிவு கட்டாயம்

தமிழகத்தில் நெல்லை உட்பட 35 மருத்துவக் கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை  தமிழ்நாட்டி உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 36 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் 14 துறைகளை சார்ந்த ஒரு சில டாக்டர்கள் ஒழுங்காக வேலைக்கு வரவில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, மருத்துவ பேராசிரியர்களும், பயிற்சி டாக்டர்களும் அவர்களது வருகையை ஆதார் அடிப்படையில் பதிவு செய்யக்கூடிய ஏஇபிஏஎஸ் சிஸ்டத்தில் சரியாக பதிவு செய்யவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 20 துறைகளில் 14 துறை பேராசிரியர்கள், பயிற்சி டாக்டர்கள் சரிவர வேலைக்கு வராமல் இருப்பதை AEBAS ( Adhar Enabled Biometric Attendance System) பதிவுகளில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கொடுத்த விளக்கத்தை தேசிய மருத்துவ ஆணையம் ஏற்றுக்கொண்டது. என்றாலும், அந்த குறைகளை கண்டிப்பா...

ஆசிரியர் திட்டியதால் 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை : பள்ளி பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள் , பதற்றம்

வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நல்லகண்ணு மகன் சங்கரகுமார்(43), விவசாயி. இவருக்கு திருமணம் முடிந்து முத்துலட்சுமி என்ற மனைவியும் சபரிகண்ணன் (15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சபரிகண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.  மாணவனை பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஜூலை 4ல் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சபரிகண்ணன் விடுமுறை முடிந்து கடந்த ஜூலை.7ல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது பள்ளி கேட் அருகே வைத்து சபரிகண்ணன் மறைத்து வைத்திருந்த வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு பள்ளிக்குள் சென்றுள்ளார். இதனையயடுத்து பள்ளியில் பிரேயர் நடக்கும் போது மயங்கி விழுந்த சபரிகண்ணனை ஆசிரியர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு 10 நாட்கள் சிகிச்சையில் இருந்த சபரி கண்ணன் சிகிச்சை பலனளிக்காமல்...

அரசு பஸ்சில் ஏ.சி.,வேலை செய்யவில்லை. ரூ 35 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

திருநெல்வேலியை சேர்ந்தவர் ராஜேஷ் 35, 2024 ஏப்ரல் 1ம் தேதி மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு அரசு போக்குவரத்து கழக ஏ.சி. பஸ்சில் ரூ.190 கட்டணத்தில் பயணம் செய்தார். சாதாரண பஸ் கட்டணத்தைவிட ரூ.37 அதிகமாக வசூலிக்கப்பட்ட நிலையில், அந்த பஸ்சில் ஏ.சி. வேலை செய்யவில்லை. இதனால் பயணத்தின் போது அதிகமான அவதிக்கு உள்ளான ராஜேஷ், பொதுமேலாளரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கறிஞர் பிரம்மா மூலமாக திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கிளடஸ் டோன் பிளசட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி, ஏ.சி. வசதியின்றி நடந்த பயணத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.25,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.10,000 என மொத்தமாக ரூ.35,000 தொகையை ஒரு மாதத்திற்குள் அரசுப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளரும் நிர்வாக இயக்குநரும் தங்களது சொந்த பணத்தில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளனர். அரசு நிதியிலிருந்து இதை வழங்கக்கூடாது என்றும், தொகையை செலுத்த தவறினால் இருவரின் பெயரிலும் செய...

திமுக கவுன்சிலர் வார்டில் வேலை செய்ய 3 லட்சம் லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர் : வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திமுக ஆட்சியில் திமுக கவுன்சிலரின் வார்டில் 3 லட்சம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் : வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மின்மாற்றி மாற்ற 3 லட்சம் லஞ்சம் கேட்ட ஊழியர் மீது புகார் திருநெல்வேலி மாநகராட்சி 7வது வார்டின் திமுக மாமன்ற உறுப்பினராக இந்திரா மணி என்பவர் பொறுப்பு வகித்து வருகின்றார். இவரது கணவர் மணி திமுக பிரதிநிதியாக உள்ளார்.  வார்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மணி, தனது வார்டில் நடைபெறாத பணிகள் குறித்து வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் அது திமுக தலைமை அலுவலகம் வரை சென்று கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு காரணமாகியுள்ளது. எனினும், மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறார், இதனால் நெல்லை மாநகராட்சி மேயர் உட்பட பல திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், 7 வது வார்டில் கடந்த 35 ஆண்டுகளாக உள்ள பழைய டிரான்ஸ்பார்மர் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உயிர் ஆபத்திற்குள்ளாகக் கூடும் என...