பாஜக உறவை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் கை கோர்க்கிறதா அதிமுக ? எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
பாஜகவுடன் உறவை முறித்து, தவெகவுடன் (TVK) அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து பரப்பப்படும் வதந்திகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பதிலளித்தார்.
அது கற்பனையான கேள்வி என அவர் திட்டவட்டமாக கூறினார். அதிமுக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,
எங்கள் தேர்தல் உத்திகளையும் தந்திரங்களையும் வெளியே கூற முடியாது என்றார்.
அதிமுக அணியில் திமுகவை வீழ்த்துவதே முக்கிய குறிக்கோள் என்பதை தெளிவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி,
திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும். எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோரை வரவேற்பதில் எந்த தவறும் இல்லை என்றார்