Skip to main content

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

 திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார் "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார்
திருநெல்வேலி: 03.11.2025

திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.

 பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது: 
"நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.

 ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்."
அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் பரப்பி வந்ததாக மாணவி குற்றம் சாட்டினார். 

சமீபத்தில் முதலமைச்சர் கலந்துகொண்ட ஒரு விழாவிற்காகத் தாங்கள் இரவு 7 மணி வரை கல்லூரியில் இருக்க நேர்ந்ததாகவும், அச்சமயத்தில் தன்னையும் தன் சக மாணவி ஒருவரையும் இணைத்து தவறாகப் பேசியதை தான் தற்செயலாகக் கேட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்..

இதை தட்டிக்கேட்டபோது, மற்ற பேராசிரியர்கள் முன்னிலையில் சகாய மேரி தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இது குறித்துக் கல்லூரி உள் புகார் குழுவிடம் (Internal Complaints Committee) புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

 உள் புகார் குழுவின் தலைவராகவும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவே இருந்ததால், புகாரை விசாரிப்பதற்குப் பதிலாகத் தங்களைச் சமாதானம் செய்து அனுப்பியதாக மாணவி குற்றம் சாட்டினார்.

கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து நீதி கிடைக்காததால், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அவர் புகார் அனுப்பியுள்ளார். ஆனால் அந்தப் புகாரையும் கல்லூரி நிர்வாகம், தற்போதைய முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் மறைத்து, சமாதானம் ஆகிவிட்டதாக ஒரு பொய்யான அறிக்கையைத் தயார் செய்துள்ளது. 


தற்போதைய முதல்வர் அந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்து, கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளார்.
அந்த விசாரணையில், பேராசிரியை சகாய மேரி, புகார் அளித்த மாணவியால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பிரச்சினையைத் திசை திருப்ப முயற்சிப்பதாக மாணவி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், பல்கலைக்கழகத் தேர்வுத்தாள்களைத் திருத்தும் இடத்திற்குச் சென்று,  தனது மதிப்பெண்ணை குறைத்துவிட முடியும் என்று பேராசிரியை தன்னை மிரட்டியதாகவும் அவர் அஞ்சுகிறார்.

இந்தச் சதிக்குக் கல்லூரி நிதியாளர், முன்னாள் பொறுப்பு முதல்வர் சுமிதா மற்றும் உள் புகார் குழுவில் உள்ள ரவிச்சந்திரன் என்ற பேராசிரியர் ஆகியோர் துணை போவதாகவும் மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
தனது படிப்பு பாழாகிவிடுமோ என்ற அச்சத்தில், தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக அந்த மாணவி கண்ணீருடன் தெரிவித்தார். பல ஆண்டுகள் கல்வியில் முன்னோடியாக விளங்கக்கூடிய ராணியின் மகளிர் கல்லூரியில் தற்போதைய சூழலில் தொடர்ச்சியாக பல சர்ச்சைகள் இருந்து வருகிறது.. அதில் பெரும்பாலான சர்ச்சைகள் இதற்கு முன்னால் இருந்த நிர்வாக கமிட்டி மூலமாக தற்போதைய முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நியாயமான முறையிலும், மாணவிகளுக்கு அரனாக விளங்கக்கூடிய தற்போதைய கல்லூரி முதல்வர் மீதும், மாணவிகள் மீதும் சில பேராசிரியைகள் தேவையில்லாத கலங்கத்தை ஏற்படுத்தி கல்லூரியின் புகழை கெடுப்பதாக சில பேராசிரியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து உயர் கல்வித் தறை விரிவான மற்றும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பதே மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது மேலும் இந்தச் சம்பவம் திருநெல்வேலி கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...