திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளை கௌரவிக்கும் விதமாக “முதல் மரியாதை” விழா நடைபெற உள்ளது.
திருநெல்வேலி வேலி புறநகர் ரோட்டரி சங்கம் மற்றும் நெல்லை லைஃப் ஒருங்கிணைத்தும், Raiyan Cloth குழுமம் நடத்தும் இந்த விழாவில், பிக்பாஸ் டைட்டில் வென்ற மற்றும் தமிழ் பேச்சாளர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்கிறார்.
இந்நிகழ்வு வரும் ஜூலை 27, 2025 அன்று, பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து முன்னேற ஊக்கம் அளிக்கும் நோக்கில், இவர்களின் வெற்றியை கௌரவித்து பாராட்டுவது போன்ற விழாக்கள் இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.