நெல்லை உட்பட 35 மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் : இனி மருத்துவர்களுக்கு பயோமெட்ரிக் வருகைபதிவு கட்டாயம்
தமிழகத்தில் நெல்லை உட்பட 35 மருத்துவக் கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டி உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 36 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் 14 துறைகளை சார்ந்த ஒரு சில டாக்டர்கள் ஒழுங்காக வேலைக்கு வரவில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, மருத்துவ பேராசிரியர்களும், பயிற்சி டாக்டர்களும் அவர்களது வருகையை ஆதார் அடிப்படையில் பதிவு செய்யக்கூடிய ஏஇபிஏஎஸ் சிஸ்டத்தில் சரியாக பதிவு செய்யவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 20 துறைகளில் 14 துறை பேராசிரியர்கள், பயிற்சி டாக்டர்கள் சரிவர வேலைக்கு வராமல் இருப்பதை AEBAS ( Adhar Enabled Biometric Attendance System) பதிவுகளில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கொடுத்த விளக்கத்தை தேசிய மருத்துவ ஆணையம் ஏற்றுக்கொண்டது. என்றாலும், அந்த குறைகளை கண்டிப்பாக சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
அது மட்டும் இல்லாமல், நெல்லை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி லைசன்ஸ் புதுப்பிப்பதற்கான விண்ணப்பமும் இன்னும் நிலுவையில உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரத்த வங்கிக்கு தேவையான லைசன்ஸ் பெற விண்ணப்பித்து 2029 ஆம் ஆண்டு வரைக்கான அனுமதி கிடைத்து விட்டதாக நெல்லை அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம், அனைத்து மருத்துவ பேராசிரியர்களும், பயிற்சி டாக்டர்களும் ஒரு நாளைக்கு 2 தடவை - வேலைக்கு வரும்போதும், வேலை முடிந்து போகும்போதும் - ஏஇபிஏஎஸ் சிஸ்டத்தில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அதுவும் விடுமுறை இல்லாமல், மொத்த வேலை நாட்களில் குறைந்தது 75% வருகை இருக்க வேண்டும்.
மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் டைரக்டர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கையில், "அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களும், பல் மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் அந்தந்த கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியர்கள், பயிற்சி டாக்டர்கள் எல்லாரும் ஒழுங்காக வருகிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும். முக்கியமான காரணங்கள் இல்லாமல் யாருக்கும் விடுப்பு கொடுக்கக் கூடாது. அதுமட்டும் இல்லாமல், ஒவ்வொரு 15 நாளுக்கும் ஒரு தடவை வருகைப் பதிவேட்டை மெயில் அனுப்ப வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், டாக்டர்கள் ஒழுங்காக வேலைக்கு வரவேண்டும் எனவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு மருத்துவர்கள் தங்களது சொந்த தனியார் கிளீனிக்கில் பணியாற்றும் நேரத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் ஒழுங்குபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.