Skip to main content

ஆசிரியர் திட்டியதால் 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை : பள்ளி பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள் , பதற்றம்

வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நல்லகண்ணு மகன் சங்கரகுமார்(43), விவசாயி. இவருக்கு திருமணம் முடிந்து முத்துலட்சுமி என்ற மனைவியும் சபரிகண்ணன் (15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சபரிகண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.


 மாணவனை பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஜூலை 4ல் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சபரிகண்ணன் விடுமுறை முடிந்து கடந்த ஜூலை.7ல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது பள்ளி கேட் அருகே வைத்து சபரிகண்ணன் மறைத்து வைத்திருந்த வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு பள்ளிக்குள் சென்றுள்ளார். இதனையயடுத்து பள்ளியில் பிரேயர் நடக்கும் போது மயங்கி விழுந்த சபரிகண்ணனை ஆசிரியர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு 10 நாட்கள் சிகிச்சையில் இருந்த சபரி கண்ணன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் நெல்லை அம்பை பிரதான சாலையில் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு மாணவரின் சடலம் கொண்டு வந்த வாகனத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி டிஎஸ்பி சத்யராஜ், அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிகண்ணனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சபரிகண்ணனின் உறவினர்கள் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சபரி கண்ணனின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...