Skip to main content

நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற "ENDO QUEST" வினாடி வினா : செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல் இடத்தை தட்டி சென்றது

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் முதல் குருதியியல் வினாடி வினா : "ENDOQUEST " - சிறப்பாக நடைபெற்றது : செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசை தட்டி சென்றனர்

  தமிழக மருத்துவக் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை சார்பில், "ENDO QUEST" என்ற பிரம்மாண்டமான குருதியியல் வினாடி வினா (செப் 19 2025 நடைபெற்றது. 

இக்கருத்தரங்கு கல்லூரி தாமிரபரணி கருத்தரங்குக் கூடத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர் மரு. ரேவதி பாலன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு சிறப்பு குருதியியல் மருத்துவர்கள் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினர். 

 சுமார் 500 மருத்துவர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கு, குருதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், சிகிச்சை முறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்ததாக கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தெரிவித்தனர். 

நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்பாளர்களின் புரிதலை சோதிக்கும் வகையில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
குருதியியல் துறையில் நிபுணத்துவம் பெறவும், புதிய அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் ஆர்வமுள்ள அனைத்து மருத்துவர்களையும், மருத்துவ மாணவர்களையும் இக்கருத்தரங்கில் பங்கேற்று  சிறப்பித்தனர். 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தமிழக மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்பதில் சந்தேகமில்லை என திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவ துறை தலைவர் மருத்துவர் ரத்தினகுமார் தெரிவித்தார். 

இன்று நடைபெற்ற இறுதி நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களின் உரைகள் மற்றும் மாணவ மாணவிகள் இடையே நடத்தப்பட்ட வினாடி வினா குறித்த போட்டிகளும் நடைபெற்றது. 


இதில் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் முதலிடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயமும் பரிசு தொகையும் சான்றிதழ்களும் மருத்துவமனையின் முதல்வர் ரேவதி பலன் மற்றும் துறை தலைவர் ரத்தினகுமார் ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி குறித்து பொது மருத்துவத் துறை தலைவர் ரத்தினகுமார் கூறும்போது :

வருங்காலத்தில் நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய மருத்துவ மாணவர்கள் குருதியியல் குறித்த தகவல்களை மேலும் தெரிந்து கொள்ளும் விதமாகவும் குருதியியல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இந்த மாநாடு சிறப்பாக அமைந்தது என்றும், தமிழகத்தில் முதல் முதலாக குருதியியல் சார்பாக நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கு மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...