திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் முதல் குருதியியல் கருத்தரங்கு: "HEMATO CON" - சிறப்பாக நடைபெற்றது
தமிழக மருத்துவக் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை சார்பில், "HEMATO CON" என்ற பிரம்மாண்டமான குருதியியல் கருத்தரங்கம் இன்று (செப்டம்பர் 18, 2025) நடைபெற்றது.
இக்கருத்தரங்கு கல்லூரி தாமிரபரணி கருத்தரங்குக் கூடத்தில் காலை 9 மணி முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மரு. ரேவதி பாலன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு சிறப்பு குருதியியல் மருத்துவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
சுமார் 500 மருத்துவர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கு, குருதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், சிகிச்சை முறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்ததாக கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்பாளர்களின் புரிதலை சோதிக்கும் வகையில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
குருதியியல் துறையில் நிபுணத்துவம் பெறவும், புதிய அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் ஆர்வமுள்ள அனைத்து மருத்துவர்களையும், மருத்துவ மாணவர்களையும் இக்கருத்தரங்கில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தமிழக மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்பதில் சந்தேகமில்லை என திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவ துறை தலைவர் மருத்துவர் ரத்தினகுமார் தெரிவித்தார்.
மேலும் நாளை இறுதி நிகழ்வும் கருத்தரங்கில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது