2026 பொங்கலை 'மோடி பொங்கலாக' கொண்டாடுவோம்: விவசாய பெருமக்களுக்கு நெல்லை வடக்கு மாவட்ட பாஜக துணைத்தலைவர் அம்மன் ஐயப்பன் வாழ்த்து
திருநெல்வேலி: 12/01/2026
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு 'மோடி பொங்கல்' ஆகக் கொண்டாட வேண்டும் என்ற முன்னெடுப்பின் கீழ், நெல்லை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் அம்மன் ஐயப்பன் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான ஆட்சியில் விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை நினைவு கூரும் வகையில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை நாடு முழுவதும் 'மோடி பொங்கலாக' கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் இந்த அறுவடைத் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் இணந்து இந்த விழாவை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பொங்கும் பொங்கலைப் போலவே விவசாயிகளின் வாழ்விலும், பொதுமக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், செழுமையும் நிலைத்திருக்க வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் அம்மன் ஐயப்பன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நெல்லை மாவட்ட பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
****