Skip to main content

இந்திய நுகர்வோர் சம்மேளனம் CCI வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 90 நாட்கள் 28 மாநிலம் 17000 கிலோமீட்டர் நுகர்வோர் விழிப்புணர்வு பாரத் யாத்ரா

இந்திய நுகர்வோர் சம்மேளனம் நுகர்வோர் விழிப்புணர்வுக்காக கடந்த 25 ஆண்டுகளாக அயராது பாடுபட்டு வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தர மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும் பாரத் யாத்ரா என்று 28 மாநிலங்களில் 90 நாட்கள் 17,000 கிலோ மீட்டர் வெள்ளிவிழா பாரத் யாத்ரா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.குறிப்பாக தமிழ் மாநிலத்தில்23 மாவட்டத்தில் 25 சிறப்பு கூட்டங்கள் நடைபெற இருக்கின்றது.
இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும், இந்திய நுகர்வோர் சம்மேளனம் இணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சொ. உடையார், கல்லிடைக்குறிச்சி நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் லயன் வீ. சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசியபெருந்தலைவர் ஆனந்த் சர்மா, தேசிய செயல் தலைவர் டாக்டர் செல்வராஜ்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் தாழையூத்து காவல் உதவி ஆய்வாளர் அருண்ராஜாவாழ்த்துரைவழங்கினார்,தேசிய துணைத் தலைவர் செல்வம், தேசியபொதுச்செயலாளர்திருநாவுக்கரசு, தேசிய யாத்திரை செயலாளர் சஞ்சய் காந்தேவால், தேசிய செயற்குழுஉறுப்பினர்டேனியல்,ராஜபாளையம் இந்திய நுகர்வோர்சம்மேளனசெயலாளர் வசந்த் ஆகியோர்நுகர்வோர் விழிப்புணர்வு உரையாற்றினர். நுகர்வோருக்கான விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கலப்படம் கண்டறிதல், தரமான அளவுகள்,தவறான விளம்பரங்கள் தடை செய்ய, செயற்கை நுண்ணறிவை நேர்வழியில் பயன்படுத்த, தர முத்திரைகள், நேர்மையான வணிகம் போன்ற பல்வேறு நுகர்வோர் விழிப்புணர்வு செய்திகள் மாணவ மாணவியருக்கு பகிரப்பட்டது. நிறைவாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்திய நுகர்வோர் செம்மையான மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் மனோகரன் சாமுவேல்,திருநெல்வேலி மாவட்ட துணை செயலாளர் கவிஞர் முத்துசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...