வர்த்தகர்களின் வாழ்வு செழிக்க 'மோடி பொங்கல்' கொண்டாடுவோம்: நெல்லை வடக்கு மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு துணைத் தலைவர் சன்னியாசி வாழ்த்து
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் போற்றும் வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் 'மோடி பொங்கலாக' உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் சன்னியாசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"உழைப்பிற்கும், நேர்மைக்கும் மதிப்பளிக்கும் உன்னதமான திருநாள் பொங்கல் திருநாள். குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் வர்த்தகர்களுக்காகவும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும் பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை உலக அளவில் வலிமையாக்கிய பிரதமரின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்த ஆண்டு பொங்கலை நாம் அனைவரும் 'மோடி பொங்கலாக' எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்.
வர்த்தக சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் பொங்கலிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் வித்திடும் பிரதமரின் தலைமையைப் போற்ற வேண்டும். இந்த இனிய தைத் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் செல்வமும், செழிப்பும் பெருகிட எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்."
இவ்வாறு நெல்லை வடக்கு மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு துணைத் தலைவர் சன்னியாசி தனது வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.