நாடு முழுவதும் ‘மோடி பொங்கல்’ கொண்டாட்டம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சக்திவேல் அறிக்கை
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை நாடு முழுவதும் ‘மோடி பொங்கல்’ ஆக மிகவும் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் கொண்டாட பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த ஆண்டு பொங்கலை மோடி பொங்கலாகக் கொண்டாட பொதுமக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து சமத்துவ நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக, உலகிற்கு உணவளிக்கும் உழவர்களின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் விதமாகவும், அவர்களின் உழைப்பைப் போற்றும் வகையிலும் இந்த பொங்கல் விழா அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில் நாட்டின் கலாச்சாரம் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நினைவுகூரும் வகையில், இந்த பொங்கல் திருநாளை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடி சிறப்பிக்க வேண்டும் என தனது அறிக்கையில் சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மோடி பொங்கலை தூத்துக்குடி மாவட்ட பாஜகவினர் சார்பில் பல்வேறு இடங்களில் மிகச் சிறப்பாக செய்து வருவதாகவும், தற்போது தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் பொதுமக்களுடன் இணைந்து பாஜகவினர் மேற்கொண்டு வரக்கூடிய இந்த மோடி பொங்கலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றும் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.