நெல்லை சுலோச்சனா முதலியார் பாலத்தில் கொடி கம்பங்கள் அமைத்தால் கடுமையான நடவடிக்கை : மேயர் ராமகிருஷ்ணன்
183 ஆண்டு பழமை வாய்ந்த நெல்லை பாளையங்கோட்டை பகுதிகளை இணைக்கும் சுலோச்சர முதலியார் பாலத்தில் சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்கள் கொடி கம்பங்கள் ஆகியவை அமைத்தால் நெடுஞ்சாலை துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை.
நெல்லை பாளையங்கோட்டை ஆகிய இரண்டு பெரு நகரங்களையும் இணைக்கும் வகையில் தாமிரபரணி நதிக்கு மேல் சுலோச்சனா முதலியார் என்ற தனிநபரின் கொடையாள் தாமிரபரணி ஆற்று பாலம் அமைக்கப்பட்டு 183 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது இதனை கொண்டாடும் வகையில் தமிழ் அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சுலோச்சனை முதலியாருக்கு இன்றைய தினம் 183 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாலத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது அதன் பின்னர் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோர் இணைந்து பாலத்தில் பயணித்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாநகராட்சி மேயர் 183 ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர் ஒருவர் பங்காளிப்புடன் கட்டி இன்றளவும் பயன்பாட்டில் உள்ள சுலோச்சர முதலியார் பாலத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வைத்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி மூலம் மாலத்தை பழமை மாறாமல் குணமிட்டு வானத்திற்கான வரலாறு குறித்த ஓவியங்கள் வரலாறு உள்ளிட்டவைகள் தெரியும் வகையில் பதாகை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது பழமை மிகுந்த சுலோச்சனா முதலியார் பாலத்தில் சுவரொட்டிகள் விளம்பர பதாகைகள் கொடிக்கம்பங்கள் ஆகியவை அமைத்தால் நெடுஞ்சாலை துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்