Skip to main content

நெல்லையில் விநாயகர் சிலை அகற்றம் : கொதித்தெழுந்த இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ; நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் போராட சென்ற பாஜக ஆன்மீகப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பாஜக ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் உட்பட பலர் கைது

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் ஒரு தனியார் உணவகத்தின் அருகே, அந்த கடையின் உரிமையாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்த விநாயகர் சிலையை, நெல்லை மாநகர காவல் துறையினர் முறையான அனுமதி பெறாமல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறி நேற்று நள்ளிரவு அகற்றினர். 
கடப்பாரை போன்ற ஆயுதங்களைக் கொண்டு விநாயகர் சிலையை இடித்து அங்கிருந்து அப்புறப்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிப் பொதுமக்களும் பெண்களும் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வீட்டுச் சிறை:
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, குற்றாலநாதனை அவரது வீட்டிலேயே போலீசார் கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தனர்.
இந்தச் சூழலில், "சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்குத்தான் அனுமதி பெற வேண்டும்; விநாயகரின் புகைப்படத்தை வைத்து வழிபாடு செய்வதற்கு அனுமதி வாங்கத் தேவையில்லை" என்று கூறி, தமிழக பாஜக ஆன்மீகம் மற்றும் திருக்கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் எஸ். சங்கரசுப்பிரமணியன் மற்றும் நெல்லை வடக்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் திருக்கோவில் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் என்ற சந்தோஷ் ஆகியோர் தலைமையில் ஆன்மீகம் மற்றும் திருக்கோவில் மேம்பாட்டுப் பிரிவு நிர்வாகிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாஜக ஆன்மீகப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பினர். "விநாயகர் புகைப்படத்தை வைத்துக் கூட வழிபடுவதற்கு தமிழகத்தில் அனுமதி இல்லையா?" என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.மேலும், இந்தப் போராட்டத்தின்போது திரண்டிருந்த பொதுமக்கள், "தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் திருட்டு மற்றும் கொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை எல்லாம் இந்த அரசு தண்டிக்காமல், ஆன்மீகத்தில் ஈடுபாடு உடைய இந்துக்களை அடக்குவதில் மட்டுமே திமுக அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக"க் குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்ட முயற்சியில் தமிழக பாஜக ஆன்மீக பிரிவு நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

.......


Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...