Skip to main content

மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் : ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி புதிய முதல்வர் ஷீலா

திருநெல்வேலியை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் புதியதாக பொறுப்பேற்ற கல்லூரி முதல்வர் :

திருநெல்வேலி பழைய பேட்டை காந்தி நகர் அருகே அமைந்திருக்கும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி ஆனது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் தென்காசி மற்றும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும் கூட பல ஆயிரக்கணக்கான மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகிறார்கள். 


கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையினை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில் இங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொரு ஆசிரியர்களும் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி என்பது தற்போதைய நவீன காலத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பல்வேறு வசதிகளை மாணவிகளுக்கு செய்து கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வியோடு மட்டுமல்லாமல் விளையாட்டு தனிநபர் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான பயிற்சி, நல்லொழுக்கம், என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது. 

புதிய முதல்வர் பொறுப்பேற்பு :

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு புதிய முதல்வராக முனைவர் ஷீலா கடந்த ஆகஸ்ட் 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பயின்ற முன்னாள் மாணவி. இந்தக் கல்லூரியிலேயே படித்து தற்பொழுது இந்த கல்லூரிக்கு முதல்வராக வந்ததில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஷீலா கூறும்போது :

"ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி என்பது ஒரு பாரம்பரியமான கல்லூரி. இந்தக் கல்லூரியில் பயின்று வர கூடிய ஒவ்வொரு மாணவிகளும் எனது குழந்தை போல கருதுகிறேன். கற்றலுக்கான அனைத்து சூழலையும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க என்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பேன், கல்வி மட்டும் இல்லாமல் மாணவிகளுக்கு மிகவும் முக்கியமானது ஒழுக்கம். எனவே ஒழுக்கத்தோடு கூடிய கல்வியினை எந்த சூழலிலும் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்றால் கல்வியில் தலைசிறந்து விளங்க வேண்டும். கல்லூரி வளாகம் என்பது மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மாணவிகளின் கடமை. எனவே சுகாதாரம், ஒழுக்கம், கல்வி இந்த மூன்றிலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். மாணவிகளின் தனி திறமையை வெளிக் கொண்டு வருவதற்கு கல்லூரியின் முதல்வர் என்ற முறையில் மாணவிகளுக்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே அனைத்து மாணவிகளும் நன்றாக கல்வி கற்று நாளைய சமுதாயத்தில்  நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதே எனது ஆசை" என்று தெரிவித்தார்.

****

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...