நெல்லையின் அடையாளம் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் : தேரோட்டத்தை காண வருகை தரும் பக்தர்களே வருக வருக : அருள் முருகேஷ்
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: பக்தர்களை வரவேற்கும் நெல்லை வடக்கு மாவட்டப் பொருளாளர் எஸ். ஏ. அருள் முருகேஷ்!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆன்மீகத் திருநாளில், நெல்லை வடக்கு மாவட்டப் பொருளாளர் எஸ். ஏ. அருள் முருகேஷ் அவர்கள், திருநெல்வேலி மாநகருக்கு வருகை தந்துள்ள அனைத்து பக்தர்களுக்கும் தனது அன்பார்ந்த வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ். ஏ. அருள் முருகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: "நெல்லை மாநகரின் ஆன்மீகச் செழுமையையும், பண்பாட்டுப் பெருமையையும் உலகிற்குப் பறைசாற்றும் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட விழாவைக் காண வருகை தந்துள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பக்தர்களையும், பொதுமக்களையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த புனித நாளில் சுவாமி நெல்லையப்பரின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்தத் தருணத்தில், கோவில் நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்குப் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இறைவன் அருளால் நம் மாவட்டம் அமைதியிலும், சுபிட்சத்திலும் சிறந்து விளங்க அனைவரும் ஒன்றிணைந்து வழிபடுவோம்," என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.