தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000 ஆகமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் "ஒரு நாள் தற்செயல் விடுப்பு" எடுத்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாநில மாநாட்டில் வலியுறுத்திய 16 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.10,000 மாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், 01.06.2009 முதல் அரசாணை எண் 234 ன் படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு மாத ரூபாய் 20 ஆயிரம் வழங்கி பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 24 ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.