Skip to main content

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : நெல்லையில் கோலாகலம்

முதலமைச்சர் தளபதி ஜோசப் விஜய்யின் பிறந்தநாள்: நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று உற்சாகமாகத் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வினை முன்னிட்டு, நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நவாஸ் மற்றும் பிற நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பொதுமக்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கியதோடு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக அழைத்துச் செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் இருக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக நிர்வாகி நவாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகி நவாஸ் கூறுகையில் ;

தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சர் ஆக இருக்கும் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் இந்த பிறந்த நாளில் அவர் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று தமிழக மக்கள் விரும்பக்கூடிய மக்களாட்சியினை நிச்சயம் அனைவருக்கும் வழங்குவார் என்றும். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வாக்கியத்தின் அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் தளபதியின் ஆட்சி நிச்சயம் இருக்கும் என்றும்., இனி தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி விஜய் அவர்கள் தான் என்றும் நவாஸ் தெரிவித்துள்ளார்.

****

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...