நெல்லையின் பெருமை நம்ம நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் : ஆன்மீக தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களை வருக வருக என வரவேற்கிறேன்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம், நாளை ஜூன் 28-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதையொட்டி, நெல்லை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் நாகராஜன் அவர்கள், விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் தனது அன்பார்ந்த வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"நெல்லை மாநகரின் ஆன்மீக அடையாளமான நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தைக் காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் வருகை தரும் தமிழகத்தின் அனைத்துப் பகுதி பக்தர்களையும் நெல்லை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "எண்ணற்ற பக்தர்கள் திரளும் இந்த நிகழ்வு எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் மற்றும் இதர உதவிகளைச் செய்து தர மாவட்ட பாஜக சார்பில் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பக்தர்கள் அனைவரும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருந்து சுவாமியின் அருளைப் பெற்றுச் செல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், அனைவருக்கும் ஆனித் தேரோட்ட நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
****