முதலமைச்சர் தளபதி விஜய்யின் பிறந்தநாள்: நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டம் :
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று உற்சாகமாகத் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வினை முன்னிட்டு, நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அமீர்கான் மற்றும் பிற நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பொதுமக்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கியதோடு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக அழைத்துச் செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் இருக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக நிர்வாகி அமீர்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கழகத் தொண்டர்களின் இந்தச் சமூக நலப்பணிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அமீர்கான் கூறும்போது:
"தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களின் இந்த வெற்றி என்பது மகத்தான வெற்றி. ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சரை தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சியும் தமிழ் மக்களின் வளர்ச்சியும் மேலோங்கி இருக்கும். மக்கள் விரும்பக்கூடிய குறிப்பாக பெண்கள் விரும்பக்கூடிய நல்லதொரு ஆட்சி மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நிச்சயம் அனைவருக்கும் வழங்கும். மேலும் தற்போதைய இளைஞர்கள் அனைவருமே முதலமைச்சரின் பின்னால் நின்று மாற்றத்திற்கான அரசியலை விரும்பும் தலைவரை நோக்கி படையெடுக்கின்றனர். இப்பொழுது மட்டுமல்ல தமிழகத்தின் எப்பொழுதுமே நிரந்தர முதலமைச்சர் தளபதி தான் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மீண்டும் ஒருமுறை எங்கள் பாசமிகு தளபதி முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
****