தமிழக அரசியல் மாற்றத்திற்காக புதிய படைப்போம்: திருநெல்வேலி வருகை தந்த எழுத்தாளர் பிரபாகரன்!
இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாகத் திகழும் அண்ணாமலை அவர்களின் அரசியல் பாதையில் பயணித்து, தமிழக மக்கள் நலனுக்கான மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில் 'We The Leaders Foundation'nஇயக்கம் களமிறங்கியுள்ளது.
இந்த இயக்கத்தைச் சார்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. பிரபாகரன் (MA) அவர்கள், நேற்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு, We The Leaders - திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அண்ணாமலை அவர்களின் ஆளுமை மிக்க வழிகாட்டுதலில், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கவும், இளைஞர்களை ஒருங்கிணைத்து வலுவான அரசியல் படைப்பை ஏற்படுத்தவும் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அரசியல் மாற்றம் : தினேஷ்குமார் கருத்து :
வருங்கால அரசியல் வெற்றியை நிர்ணயிப்பதில் அண்ணன் அண்ணாமலை அவர்கள் தொடங்கி இருக்கக்கூடிய மாற்று அரசியலுக்கான மாற்றத்தை நோக்கி இளைஞர்கள் பயணிக்க வேண்டும். நம்பிக்கையுடன் பயணித்தால் அனைவருக்கும் வெற்றி நிச்சயம். அண்ணாமலை அவர்கள் துடிப்பான நபர். அவர்கள் வழியில் தமிழக இளைஞர்கள் அனைவரும் பயணிக்க அன்போடு அழைக்கிறோம் என்று தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
****