ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர்களை வசவப்பபுரம் அம்பேத்கர் நகர் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர்களை வசவப்பபுரம் அம்பேத்கர் நகர் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது
சட்டமன்றத் தேர்தல் 2026 ல் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மதன் ராஜா வெற்றி பெற்றதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கருகுளம் வடக்கு ஒன்றியம் வசவப்பபுரம் அம்பேத்கர் நகரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர்களுக்கு நிர்வாகிகள் வள்ளிநாயகன்,
வழக்கறிஞர் திவாகர், வழக்கறிஞர் ஆனந்த், காளை பெருமாள்.வேணு மனோஜ், தகவல் தொழில் நுட்ப அணி அருள் ஜெசுராஜ்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும்
ஊர் பொதுமக்கள் சார்பாக சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பகுதி நேர ரேஷன் கடை, குடிதண்ணீர் வசதி, செயல்படாத இ சேவை மையத்தை செயல்படுத்துவது.நூலகம்,
பொது சுகாதார கழிப்பிட வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக மனுவாக அளித்தனர்.