Skip to main content

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா ? நெல்லை வடக்கு மாவட்ட பாஜக ஆன்மீக பிரிவு தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக நெல்லை வடக்கு மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் MGG சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான திருக்கோவில்கள் உள்ளன. இந்தத் திருக்கோவில்களுக்குச் சொந்தமாகப் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும், பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் நவரத்தின ஆபரணங்களும் உள்ளன. தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். 
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு. சேகர்பாபு அவர்கள், திருக்கோவில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை என்ன செய்துள்ளார் என்பது மர்மமாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் உள்ளது என இந்து பக்தர்கள் கருதுகின்றனர். இது குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பாகும்.

முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக, உண்மையான இந்து தெய்வ பக்தி உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து விபரங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
தமிழகத்தின் தொன்மையான ஆன்மீகச் சொத்துக்களையும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கப் புதிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக MGG சுப்ரமணியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...