ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் அருணாச்சலம் வேண்டுகோள் :
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அதற்கான கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக உட்பட தேசிய ஜனநாயக கூட்டணிகள் தங்கள் காண தொகுதியை கைப்பற்ற போட்டா போட்டி போட்டு வருகின்ற நிலையில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை டாக்டர் அருணாச்சலம் பொது மக்களால் நன்கு அறியப்படக்கூடிய வேட்பாளர்களில் ஒருவராக வரம் வருகிறார்.,
ஆலங்குளம் தொகுதியில் உள்ள அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெற்ற வேட்பாளர்களில் ஒருவராக இருக்கக்கூடிய டாக்டர் அருணாச்சலம் அந்தப் பகுதியில் நிலவக்கூடிய பொதுமக்கள் சந்திக்கக்கூடிய அன்றாட பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்களின் மனங்களை கவரக்கூடிய வகையில் சிறப்பாக செயல்படுவார் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் பயணிக்கும் மருத்துவர் அருணாச்சலம்., ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் நிலவக்கூடிய மக்களின் பிரச்சினைகள், சாலை வசதிகள், குடிநீர் பிரச்சனை, வேலைவய்ப்புகள் என மக்கள் அன்றாடம் சந்திக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவராக இருக்கிறார்.
தொகுதி மக்களுக்கு நன்கு பரீட்சையமான மக்களில ஒருவராக இருக்கக்கூடிய நபரை வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் பாரதிய ஜனதா கட்சி ஆலங்குளம் தொகுதியில் அமோக வெற்றி பெறும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.