திசையன்விளை இடையன்குடி பிரதான குடி சாலையில் குடிநீர் குழாய் உடைநததால் குளம்போல் மாறிய சாலை : டெங்கு பரவும் அச்சம்
திசையன்விளை இடையன்குடி பிரதான குடி சாலையில் குடிநீர் குழாய் உடைநததால் குளம்போல் மாறிய சாலை . டெங்கு பரவும் அச்சம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வழியாக கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
திசையன்விளை – இடையன்குடி சாலையில் அமைந்துள்ள இந்த பிரதான குழாய் உடைந்து ஏற்பட்டுள்ள நீர் கசிவினால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. மேலும் அருகிலுள்ள மக்கள் வசிக்கும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்தப் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் சிரமம் ஏற்படுவதுடன், நீர் தேக்கம் காரணமாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற கொசு வழி நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை உடனடியாக சரிசெய்து, தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.