மதுரையை நோக்கி வரும் ‘வளர்ச்சி நாயகன்’: பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நெல்லை தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் உற்சாக வரவேற்பு!
தமிழகத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார மையமான மதுரைக்கு நாளை வருகை தரும் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, நெல்லை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தக அணி சார்பில் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் மைக்கேல் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இந்தியாவை உலக அரங்கில் பொருளாதார வல்லரசாக மாற்ற அயராது உழைத்து வரும் நமது மதிப்பிற்குரிய பிரதமர் அவர்கள், தமிழகத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் கொண்டுள்ள பற்று அளப்பரியது. மதுரையில் நடைபெறவுள்ள பல்வேறு நலத்திட்டத் தொடக்க விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வரும் அவரை, தமிழக மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக, வர்த்தக ரீதியாகவும் தொழில் துறை ரீதியாகவும் தென் தமிழகம் புதிய உத்வேகம் பெற பிரதமரின் இந்த வருகை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். 'மேக் இன் இந்தியா' மற்றும் 'முத்ரா' போன்ற திட்டங்கள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமை பிரதமரையே சாரும்.
நெல்லை தெற்கு மாவட்ட வர்த்தக அணியின் சார்பாகவும், ஒட்டுமொத்த வர்த்தகப் பெருமக்கள் சார்பாகவும் பிரதமரை வருக! வருக! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம். பிரதமரின் இந்த வருகை தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை."
இவ்வாறு அந்த அறிக்கையில் நெல்லை தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் மைக்கேல் ராஜ் தெரிவித்துள்ளார்.