நாளை மதுரை வருகிறார் பிரதமர் மோடி: தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கத் தயார்!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி பாஜக தலைவர் சக்திவேல் வரவேற்பு
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும், பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காகவும் நாளை (மார்ச் 1, 2026) மதுரைக்கு வருகை தருகிறார்.
நாளை மதியம் சுமார் 3:30 மணியளவில் மதுரை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்தைத் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, காணொலி வாயிலாக சுமார் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து மாலை 4:00 மணியளவில், பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று பிரதமர் சுவாமி தரிசனம் செய்கிறார்.
பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு:
பிரதமரின் இந்த வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் அவருக்குத் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் தமிழக பாஜக மாநில இளைஞரணி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சக்திவேலும் இதில் கலந்து கொள்கிறார். தமிழக பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் மற்றும் வரவேற்புகள் தயாராகி வருகிறது.
வரவேற்பு மற்றும் கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, மாலை 4:30 மணியளவில் மதுரையின் மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் திரு. நைனார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பிரதமர் வருகையையொட்டி மதுரையில் 7,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மதுரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை வருகையை முன்னிட்டு மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சுமார் 7000க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்பொழுது மதுரை மாவட்டம் முழுவதும் பாஜக கொடி பறக்க தொடங்கியுள்ளது.
***