Skip to main content

வணிக வளாகம் கட்ட அனுமதி பெற்று தேவாலயம் கட்ட முயற்சி : போராட்டத்தில் முதியவர் உயிரிழப்பு;

வணிக வளாகம் கட்ட அனுமதி பெற்று தேவாலயம் கட்ட முயற்சி : போராட்டத்தில் முதியவர் உயிரிழப்பு;

 100-க்கும் மேற்பட்டோர் கைது!


 நெல்லை மாவட்டம் தெற்கு ஏராந்தை பகுதியில், வணிக வளாகம் கட்ட அனுமதி பெற்ற இடத்தில் தேவாலயம் கட்டப்படுவதாகக் கூறி பொதுமக்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ஏராந்தை பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வணிக வளாகம் (Shopping Complex) கட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அந்த அனுமதியை மீறி அங்கு மதமாற்ற நோக்கத்தோடு தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்த ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், போராட்டக்களத்தில் இருந்த மணிவேல் (60) என்ற முதியவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்க ஊர் எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஊருக்குள் வர முயன்ற ஆம்புலன்ஸ் வர தாமதமானதாகவும், அந்தத் தாமதமே மணிவேலின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்றும் பொதுமக்கள் ஆவேசமாகப் புகார் தெரிவிக்கின்றனர்.


பரபரப்பான சூழல் - 100-க்கும் மேற்பட்டோர் கைது:


முதியவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு வைக்கப்பட்ட பொதுமக்கள், உணவு மற்றும் தண்ணீரைப் புறக்கணித்து மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "அனுமதிக்கப்பட்ட வணிக வளாகத்தைத் தவிர வேறு எந்த கட்டுமானமும் அங்கு நடக்கக்கூடாது" என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் VP ஜெயக்குமார் நேரில் வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார். தற்போது அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதாக எழுந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதாகி சிறையில் இருக்கும் பொது மக்களை நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவிப்பதற்காக நெல்லை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் கண்ணன் உட்பட பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.


****

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...