"தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா, மது!" -
சபாநாயகர் அப்பாவுவை மேடையிலேயே வறுத்தெடுத்த பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக்
இணையத்தில் வீடியோ வைரல் !!
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், தமிழக பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவர் அசோக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கடும் கண்டன உரைகளை நிகழ்த்தினர்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகவும், இதனைத் தடுக்க வேண்டிய அரசு மெத்தனமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவர் அசோக், தனது பேச்சால் ஒட்டுமொத்த கூட்டத்தையும் அதிரவைத்தார்.
குறிப்பாக, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவுவை மிகக்கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அவர் பேசுகையில்:
ராதாபுரம் தொகுதியில் எங்கு திரும்பினாலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, இதனைத் தடுக்கத் தவறிவிட்டார். தமிழகத்தில் என்ன ஒரு அவலம் நடந்தாலும், 'நாங்கள் தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோமே' என்று கூறி திமுக அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது," என கிழித்துத் தொங்கவிட்டார்.
தொகுதி நிலவரங்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்கள் ரசிக்கும் விதமாகவும் அதே சமயம் ஆவேசமாகவும் அசோக் பேசிய விதம் அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சபாநாயகர் அப்பாவுவை இலக்கு வைத்து அவர் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பாஜக நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகத் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தினர்.
****