மத்திய நிதி அமைச்சரால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளதாகத் தமிழக பாஜக பட்டியலணி மாநில பொதுச் செயலாளர் தளபதி பிச்சையா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
விளிம்புநிலை மக்களுக்கான பட்ஜெட்:
"மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) மையமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்."
"நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கும் இந்த பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு தொலைநோக்கு ஆவணம் ஆகும்." "தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களுக்கும், புதிய உட்கட்டமைப்பு பணிகளுக்கும் இந்த பட்ஜெட் பெரும் ஊக்கத்தை அளிக்கும். ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் இந்த பட்ஜெட்டை வழங்கிய பாரதப் பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தமிழக பாஜக பட்டியலணி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு தனது அறிக்கையில் தளபதி பிச்சையா குறிப்பிட்டுள்ளார்.