பாஜக நிர்வாகியின் காரில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், நெல்லை மாவட்ட நிர்வாகியின் வாகனத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
நெல்லை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழன், பாஜகவின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் பயன்படுத்தும் வாகனத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி கட்சி கொடியினைப் பொருத்தி, அவரது பணிகளை வாழ்த்தினார்.
இந்த நிகழ்வின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.
இது குறித்து செந்தமிழன் கூறும் போது :
மக்கள் விரும்பும் அரசியல் மாற்றம் நிச்சயம் 2026 தேர்தலில் நடக்கும் மேலும் பாஜக தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலப் பிரிவு சார்பாக வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பாஜக கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் மலர செய்ய பாஜக நிர்வாகிகளோடும் மக்களோடும் களத்தில் பயணிக்கப் போவதாக தெரிவித்தார்.