Skip to main content

2026 சட்டமன்ற தேர்தலில் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இராதாபுரம் தொகுதி

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

 தென் தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ராதாபுரம், வரும் தேர்தலில் ஒரு 'நட்சத்திர அந்தஸ்து' பெற்ற தொகுதியாக மாறப்போகிறது. சபாநாயகர் எம். அப்பாவுவின் சொந்தத் தொகுதி என்பதால், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இங்கு ஒரு கௌரவப் போர் மூண்டுள்ளது.

தென் தமிழகத்தின் அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழக பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் அசோக், இந்தத் தொகுதியில் ஒரு வலுவான மாற்றாக உருவெடுத்து வருகிறார்.


யார் இந்த அசோக் ?? (BJP):

தொகுதியில் ஒரு புதிய அரசியல் அலை
சபாநாயகர் அப்பாவு (திமுக) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இன்பத்துரை (அதிமுக) போன்ற மூத்த தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த மண்ணில், அசோக் தனது "இளைஞர் கூட்டம்" மற்றும் "மக்கள் பணி" மூலம் புதிய வேகம் கொடுத்து வருகிறார்.
ராதாபுரம் தொகுதியின் பூர்வீகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இப்பகுதியின் புவியியல் மற்றும் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர்.

கடந்த சில ஆண்டுகளாக, கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பொதுப் பிரச்சனைகளுக்காக நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக யார் அந்த சார் ? விவகாரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி கைதானார், பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடத்தி பாஜகவின் தலைமை கவனத்தையும் பெற்றவர்.

பிரதமர் மோடியின் நலத்திட்டங்களான 'கிசான் சம்மா நிதி', 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீடு மற்றும் முத்ரா கடனுதவி போன்றவை தகுதியான மக்களுக்குச் சென்றடைவதை முழு நேர அரசியல்வாதியாக உன்னிப்பாக மக்களுடன் மக்களாக பயணித்து கவனித்து வருகிறார் வருகிறார். அசோக்கின் இந்த அரசியல் ஈடுபாடு ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும், உளவுத்துறை என அனைத்து தரப்பினரும் உன்னிப்பாக கவனித்து வரும் முழு நேர அரசியல்வாதியாக தன்னை இராதாபுரத்தில் முத்திரை பதித்து வருகிறார். இது கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் இவருக்கு நல்ல மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டி காட்டுகிறார்கள். 

 ராதாபுரம் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்வதைத் தடுக்க, இப்பகுதியில் சிறு மற்றும் குறுந்தொழில் முனையங்களை (MSME Clusters) உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தை தமிழக அரசிடம் முன்னெடுத்து வருகிறார்.
கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்களின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசின் கடல்சார் திட்டங்கள் மூலம் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு, விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார். 

அசோக்கிற்கு இருக்கும் வெற்றி வாய்ப்புகள் :

 முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அசோக்கின் துடிப்பான செயல்பாடு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில இளைஞரணி துணைத் தலைவர் என்ற முறையில், தொகுதி முழுவதும் ஒவ்வொரு பூத் அளவிலும் பாஜகவின் இளைஞர் பாசறையை வலுப்படுத்தியுள்ளார். மேலும் வலுப்படுத்தி வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில், ராதாபுரம் தொகுதியை அசோக் வெற்றி பெறக்கூடிய 'A' பிரிவு தொகுதியாக பாஜக மேலிடம் கருதுகிறது. கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கேட்டில் ராதாபுரம் பாஜகவிற்கு நேரடியாக போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டால் கூட கணிசமான வாக்கு சதவீதத்தை உயர்த்தி, தொகுதியின் கிங் மேக்கராக மாற வாய்ப்புள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.ராதாபுரத்தில் காலம் காலமாக நிலவி வந்த 'இரு முனைப் போட்டி' என்பதை மாற்றி, ஒரு 'மும்முனைப் போட்டி'யை அசோக் உருவாக்கியுள்ளார். 2026 தேர்தலில், சபாநாயகரின் அனுபவத்தையும், வியூகத்தையும் மீறி, பாஜக + அதிமுக கூட்டணியில், இராதாபுரம் தொகுதி பாஜகவிற்கு கிடைக்குமா ?? அப்படி கிடைத்தாலும் அசோக் மக்களின் மனங்களை வெல்வாரா என்பதுதான் தற்போதைய ராதாபுரம் அரசியலின் மில்லியன் டாலர் கேள்வி.

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...