Skip to main content

தூத்துக்குடியில் தெப்பக்குளத்தைச் சுற்றிய கிரானைட் கற்கள் திடீர் சரிவு: அரசுக்கு கடும் கண்டனம் : S.சங்கர சுப்பிரமணியன், மாநில செயலாளர் ஆன்மீகம் மற்றும் திருகோவில் மேம்பாட்டு பிரிவு

தூத்துக்குடியில் தெப்பக்குளத்தைச் சுற்றிய கிரானைட் கற்கள் திடீர் சரிவு: பராமரிப்புப் பணிகள் பாதிப்பு

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான தெப்பக்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள், குளத்தில் ஏற்பட்ட அதிக நீரின் அழுத்தம் காரணமாக இன்று (டிசம்பர் 12) திடீரெனச் சரிந்து விழுந்தன.
மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தெப்பக்குளத்தின் மேற்குப் பகுதியில் நீரின் அளவு தற்போது அதிகமாக உள்ள நிலையில், இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் குளத்தின் கரையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள் உடைந்து கீழே விழுந்தன. இந்தச் சரிவால் தெப்பக்குளத்தின் கரையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குளம், அருகில் உள்ள சிவன் கோவில் வசந்த மண்டப விழாவிற்குப் பயன்படுத்தப்படும் இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தெப்பக்குளத்தைச் சீரமைத்து, அதனைச் சுற்றிலும் 'வாக்கிங் ட்ராக்' அமைக்கும் பணி மற்றும் கரைகளை அழகுபடுத்தும் பணிகள் ஏற்கனவே சுமார் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நடந்துகொண்டிருந்த வேளையில் விபத்து ஏற்பட்டதால், மேலும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, உடைந்து விழுந்த கற்களை அகற்றிச் சீரமைப்புப் பணிகளை விரைவில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் அலட்சியப்போக்கும், மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் தமிழக அரசிற்கு S.சங்கர சுப்பிரமணியன், (மாநில செயலாளர் ஆன்மீகம் மற்றும் திருகோவில் மேம்பாட்டு பிரிவு) அவர்கள் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


*****

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...