பள்ளமடை பெரியகுளம் மறுகால் பாய்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி !!
பாஜகவினர் மலர் தூவி மகிழ்ச்சி
மானூர்:
திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஒன்றியம் பள்ளமடை பெரியகுளம் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் ஆணைக்கிணங்க பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. A. முத்துபலவேசம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நீர்வரத்து குறித்து கேட்டறியப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற நிர்வாகிகள்:
இந்த நிகழ்வின் போது மாவட்ட இணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் கலாராணி, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், சிறுபான்மை அணி மாவட்டத் துணைத் தலைவர் மலேசியா சவரிமுத்து, மற்றும் பொருளாதாரப் பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், மானூர் மத்திய ஒன்றிய தலைவர் செ. தனபால்சிங், துணைத்தலைவர் ஆஷா, ஒன்றிய பொதுச் செயலாளர் பிரேம்குமார் (EX-Army), ஒன்றிய செயலாளர் ராகவேந்திரன், பொருளாதாரப் பிரிவு ஒன்றிய தலைவர் காளிதுரை, சக்தி கேந்திரம் பொறுப்பாளர் காளிமுத்து, கிளை தலைவர் மாரியப்பன், கிளைச் செயலாளர் சுந்தரமகாலிங்கம், முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.