திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபம் ஏற்றிய வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு திருப்பரங்குன்றம் விளக்கு தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நேற்றைய தினம் திருப்பரங்குன்றத்திற்கு சென்ற தமிழக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, உட்பட 300-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அதில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட கே டி சி நகர் பகுதியை சேர்ந்த மண்டல தலைவர் பேச்சியம்மாள் தலைமையில் பாஜக நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதில் அருண் கணேஷ், உட்பட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு
திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார் "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது: "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...