Skip to main content

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு அதிர்ச்சி அளிக்கிறது !!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி வழிபட நீதிமன்றமே அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசுக்கு அதில் என்ன கஷ்டம் ?

மதுரை மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் முதன்மையான திருத்தலமான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி மலைமீது தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவு பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) இந்த அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது ஒட்டுமொத்த ஆன்மீக மக்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆன்மீக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு நெல்லை மாவட்ட ஆன்மீகம் மற்றும் திருக்கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சுப்ரமணியன்@சந்தோஷ் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டனத்தில், "நீதிமன்றமே அனுமதி அளித்த பிறகும், அதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வது, மக்களின் நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை, இந்து சமயத்தின் வளர்ச்சிக்காகச் செயல்படாமல், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் ஆன்மீகம் மற்றும் திருக்கோவில் மேம்பாட்டு பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும், அரசின் இந்த மேல்முறையீட்டு நடவடிக்கைக்குத் தீவிரமான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மாநில தலைவர் செல்வி தாமோதர், மாநில செயலாளர் எஸ். சங்கர சுப்ரமணியன் உட்பட பல நிர்வாகிகள், "அரசு உடனடியாக தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெற வேண்டும். பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும்," என வலியுறுத்தி வருகின்றனர்.

....

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...