Skip to main content

பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நிதின் நபின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் : தமிழக பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவர் அசோக்

பாஜகவின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நிதின் நபின் அவர்களுக்குத் தமிழக பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் அசோக் வாழ்த்து: 

உண்மையாகவும் உறுதியாகவும் உழைத்தால் கட்சியில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம் என்பதற்கு இந்த உலகிலேயே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று அசோக் பெருமிதம் !!
சென்னை: 16/12/2025
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிதின் நபின் அவர்களுக்குத் தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாநில துணைத் தலைவர் திரு. அசோக் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தி
தமிழக பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவர் திரு. அசோக் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், நிதின் நபின் அவர்களின் இந்தப் புதிய பதவிக்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் பெருமிதத்துடன் பேசியுள்ளார். உண்மையாகவும், உறுதியுடனும் உழைக்கும் எவரும் வாழ்வில் முன்னேறலாம் என்பதற்கு உலகிலேயே எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய ஒரே அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சிதான்" என்று தமிழக பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் திரு. அசோக் அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். பாஜகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நாட்டின் உயரிய பதவிகளை அடைய முடியும் என்பதற்குப் பல உதாரணங்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதின் நபின் அவர்களின் இந்தப் புதிய நியமனம், கட்சியின் அடித்தளத் தொண்டர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாகவும் உத்வேகமாகவும் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை தொலைநோக்கு பார்வையில் வழிநடத்திக் கொண்டிருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி அவர்களுக்கும், தமிழக பாஜக மாநில தலைவர் பாசமிகு பண்ணையார் நயினார் நாகேந்திரன் அண்ணன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழக பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவர் அசோக் தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். 

2026 இல் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பாஜகவின் கோட்டையாக மாறும் !! 

வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் ராதாபுரம் தொகுதி பாஜகவின் கோட்டையாக மாறும் என்றும்., பீகார் திருவனந்தபுரத்தில் தொடர்ந்து தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும்., ராதாபுரம் தொகுதி மக்கள் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு செயல்பாடுகளில் திருப்தி இல்லாத காரணத்தினால் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்றும் அந்த மாற்றத்தை பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகளால் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். எனவே மக்களின் நம்பிக்கையை பெற்று விளங்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியை கைப்பற்றி ராதாபுரம் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக மாறுவதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...