இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் அரசு தலையிட வேண்டாம் : நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக அரசு ஏன் எதிர்க்கிறது ? போத்தி பாண்டியன் கேள்வி
திருப்பரங்குன்றம் மலை தீபம்: நீதிமன்ற அனுமதியை எதிர்த்து திமுக அரசின் மேல்முறையீடு; நெல்லை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் போத்தி பாண்டியன் கடும் கண்டனம்!
மதுரை மாவட்டத்தில் உள்ள முருகப் பெருமானின் சிறப்புமிக்க ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மலை மீது தீபம் ஏற்றி வழிபடும் விவகாரத்தில், சமீபத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய சாதகமான உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக இந்து சமய நம்பிக்கையுடையோரிடையே, பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்று நெல்லை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் போத்தி பாண்டியன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் மற்றும் இதர விசேஷ நாட்களில் தீபங்கள் ஏற்றுவது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த போதும், சில நிர்வாகக் காரணங்களுக்காக இதில் சிக்கல்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பான வழக்கில், இந்து சமயத்தின் தொன்மையான வழிபாட்டு உரிமைகளையும், பக்தர்களின் மன உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, மலையின் உச்சியில் தீபம் ஏற்றி வழிபட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவு முருக பக்தர்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரசின் செயல்:
இந்நிலையில், நீதிமன்றம் பக்தர்களுக்குச் சாதகமாக அளித்த இந்த முக்கிய உத்தரவை எதிர்த்துத் தமிழகத்தை ஆளும் திமுக அரசு தற்போது மேல்முறையீடு செய்திருப்பது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
போத்தி பாண்டியனின் குற்றச்சாட்டுகள்:
தமிழக அரசு உடனடியாகத் தனது முடிவை மாற்றிக் கொண்டு, மேல்முறையீட்டை வாபஸ் பெற்று, திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைக்குத் தடையின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்றும் போத்தி பாண்டியன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.