Skip to main content

ராதாபுரம் தொகுதி யாருக்கு ? இருமுனை போட்டியாக களம் இறங்க தயாராகும் வேட்பாளர்கள் யார் யார் ?? துல்லியமான சர்வே

ராதாபுரம் 2026 இல் யாருக்கு ??
முழுமையான தொகுதி அலசல்..

சபாநாயகரின் கோட்டையைத் தகர்க்குமா எதிர்க்கட்சிகள்? –

 தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.தென் தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ராதாபுரம், வரும் தேர்தலில் ஒரு 'நட்சத்திர அந்தஸ்து' பெற்ற தொகுதியாக மாறப்போகிறது.

 சபாநாயகர் எம். அப்பாவுவின் சொந்தத் தொகுதி என்பதால், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இங்கு ஒரு கௌரவப் போர் மூண்டுள்ளது.

தற்போதைய கள நிலவரம்:

மும்முனைப் போட்டியா? சதுரங்க வேட்டையா?
கடந்த 2021 தேர்தலில் வெறும் 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. இந்த முறை களத்தில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் நாம் தமிழர் கட்சி (NTK) ஆகியவை கணிசமான இளைஞர் வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெற்றி வாய்ப்பு என்பது நூலிழையில் ஊசலாடுகிறது.

முக்கிய வேட்பாளர்கள்: ஒரு விரிவான பார்வை


ராதாபுரம் களத்தில் முன்னிலையில் இருப்பவர்களின் பின்னணி மற்றும் பலம்-பலவீனம் பின்வருமாறு:

திமுக: எம். அப்பாவு (தற்போதைய சபாநாயகர்)

பின்னணி: 1996 முதல் இந்தத் தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர். ஆசிரியர் பணியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர்.
  பலம்: தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். சபாநாயகர் என்ற முறையில் தொகுதியில் கொண்டு வந்துள்ள அரசுத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இவருக்கு மிகப்பெரிய சாதகமாகும்.

சவால்: ஆளுங்கட்சி மீதான இயல்பான அதிருப்தி மற்றும் அணுமின் நிலையக் கழிவு விவகாரத்தில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம். மேலும் சபாநாயகரின் சொந்த தொகுதியாக இருந்தாலும் குடிநீர் பிரச்சனை, உயர்தர மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில் குறைபாடு போன்ற அடிப்படை சில சிக்கல்கள் இந்த தொகுதியில் நிலவி வருகிறது.

அதிமுக: ஐ.எஸ். இன்பத்துரை (முன்னாள் எம்.எல்.ஏ)

பின்னணி: ஒரு திறமையான வழக்கறிஞரான இவர், 2016 தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (49 வாக்குகள்) அப்பாவுவை வென்றவர். 2025-ல் ராஜ்யசபா உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
பலம்: தொகுதியில் சட்ட ரீதியான பல உதவிகளை மக்களுக்குச் செய்தவர். அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்துள்ளார். குறிப்பாக, 2016-2021 காலக்கட்டத்தில் இவர் செய்த மக்கள் பணிகள் இன்னமும் பேசப்படுகின்றன.
சவால்: தற்போது டெல்லி அரசியலில் (ராஜ்யசபா) கவனம் செலுத்துவதால், மீண்டும் உள்ளூர் களத்தில் தீவிரமாகச் செயல்பட வேண்டிய சூழல் உள்ளது.

பாஜக: அசோக் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்)
பின்னணி: ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர். சமூக ஆர்வலராகவும், பாஜகவின் முக்கிய இளைஞர் முகமாகவும் உருவெடுத்துள்ளார்.
 
பலம்: இளைஞர்களைத் திரட்டுவதில் வல்லவர். மத்திய அரசின் நலத்திட்டங்களை வீடு வீடாகக் கொண்டு செல்வதில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில், தொகுதியைக் கேட்டுப் பெறுவதில் இவர் முனைப்பாக உள்ளார்.

 திமுக சார்பில் தற்போதைய தமிழக சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு., வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நேரடி போட்டியாகவோ அல்லது அவரது மகனான அலெக்ஸ் அப்பாவு அவர்களுக்கு தொகுதியை கேட்டு பெறலாம் என்ற நிலை இருக்கிறது. 
அதிமுகவைப் பொறுத்தவரை ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை அவர்கள் சற்று பரீட்சையமான நபராக அறியப்பட்டாலும் அவர் தற்போது வகிக்கும் பொறுப்பில் இருந்து பின்வாங்குவாரா ? அல்லது அதை பொறுப்பில் மீண்டும் தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது . அதிமுகவிற்கு ராதாபுரத்தை சொந்த தொகுதியாக கொண்ட நட்சத்திர வேட்பாளர் இல்லாத நிலை தற்போது வரை நிலவி வருகின்ற காரணத்தினால் ராதாபுரம் தொகுதியில் நேரடியாக பாஜக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என உளவுத்துறை தகவல்களும் தெரிவிக்கின்றது.
ஒருவேளை ராதாபுரம் தொகுதியில் பாஜக நேரடி களத்தில் இறங்கினால் ., பாஜகவின் மேலிட தலைமை மற்றும் தற்போதைய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் பரீட்சையமான, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அதிகம் அறியப்பட்ட அசோக் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளம், யார் அந்த சார் என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுகவுக்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் என்று பொதுமக்கள் மத்தியிலும் கட்சியிலும் தன்னை தனது அரசியல் பயணத்தில் முன்னிலைப்படுத்தி வருகிறார் அசோக்.
எனவே இந்த முறை சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியை பொருத்தவரை மும்முனைப் போட்டி நிலவும்.  இறுதியில் திமுக வெர்சஸ் பாஜக என்ற சூழல் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

DMK (VS) BJP, ADMK

பொறுத்திருந்து பார்ப்போம்

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...