Skip to main content

நெல்லையில் செவிலியர்கள் போராட்டம் : நேரில் வந்து ஆதரவு தெரிவித்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் 7-வது நாளாக செவிலியர்கள் போராட்டம் - த.வெ.க நிர்வாகிகள் நேரில் ஆதரவு!


தமிழகம் முழுவதும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் இன்று 7-வது நாளை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தார்கள்
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, தமிழக அரசுக்கும் சுகாதாரத் துறைக்கும் எதிராக செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
த.வெ.க நிர்வாகிகள் ஆதரவு:
இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் போராடி வரும் செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று போராட்டக் களத்திற்கு நேரில் சென்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் திரண்ட த.வெ.க நிர்வாகிகள், செவிலியர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்கினர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செவிலியர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு அரசியல் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து சுப்பிரமணியம் தெரிவிக்கையில் :- 
தமிழக முழுவதும் செவிலியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கடும் குளிரிலும்  செவிலியர்கள் இரவு பகலாக இங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நியாயமான கோரிக்கையை முன்னிறுத்தி போராடும் செவிலியர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

*******

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...