சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு சுற்று சுவரில் திமுக தலைவர் படங்களா ?? பாஜக கடும் எதிர்ப்பு
பாளையங்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு சுற்று சுவரில் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி படங்கள் : நெல்லை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சார்பில் காவல்நிலையத்தில் புகார்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று வருகை தர உள்ளார். இன்று ரெட்டியார்பட்டி பொருநை அரசு அருங்காட்சியகத்தை திறந்து வைக்க கூடிய தமிழக முதலமைச்சர் நாளை மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார், மேலும் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரே அமைந்திருக்க கூடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு சுற்று சுவரில் கருணாநிதி, கனிமொழி, முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் வரையப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுதந்திர போராட்ட வீரர் நினைவாக கட்டப்பட்டிருக்கக்கூடிய அரசு சுவற்றில் இதுபோல அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வரைந்தது எதற்கு என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். திமுக அவர்களின் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வரைந்ததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதனை கண்டித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் கந்தசாமி சார்பில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நினைவு சுற்று சூழத்தில் இது போன்ற அரசியல் தலைவர்களின் விளம்பரங்களை அனுமதிக்க கூடாது என்றும் உடனடியாக வரையப்பட்ட படங்களை அழிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.